இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் அமைச்சர் ஜீவன் தொண்டமான்

01 Mar, 2024 | 02:42 PM
image

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (29) மாலை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது, இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாகவும் சமகால நிலவரங்கள் தொடர்பிலும்  கலந்துரையாடப்பட்டன.

அத்தோடு, மலையக மறுமலர்ச்சிக்காக இந்தியா வழங்கி வரும் அபிவிருத்திசார் பங்களிப்புகளுக்கும் மலையக மாணவர்களுக்கு இந்தியா வழங்கிவரும் புலமைப்பரிசில் திட்டங்களுக்கும் ஜீவன் தொண்டமான் நன்றி தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை, இந்தியாவுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவதில் மலையக மக்களுக்குரிய வகிபாகம் பற்றியும் பேசப்பட்டது. குறிப்பாக, பாரத் -லங்கா வீட்டுத் திட்டம்  குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர்...

2024-04-16 01:31:08
news-image

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை இலகுபடுத்த விரைவில்...

2024-04-15 22:57:31
news-image

இலங்கைக்கு வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கியது...

2024-04-15 21:46:59
news-image

தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது...

2024-04-15 20:01:54
news-image

கம்பளையில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து 9...

2024-04-15 19:10:56
news-image

அம்பலாங்கொடையில் 7,600 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பெண்...

2024-04-15 18:46:34
news-image

இன்றும் இடியுடன் கூடிய பலத்த மழை!...

2024-04-15 17:50:45
news-image

நுவரெலியாவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

2024-04-15 16:59:39
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய பயண...

2024-04-15 17:32:02
news-image

இ.போ.ச - தனியார் இணைந்த நீண்ட...

2024-04-15 16:46:29
news-image

நீர்த்தாங்கி தலையில் வீழ்ந்து மூன்றரை வயது...

2024-04-15 16:34:23
news-image

யாழில் போதையில் குழப்பங்களை ஏற்படுத்திய 7...

2024-04-15 15:50:31