தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல் : பாணந்துறையில் சம்பவம்

01 Mar, 2024 | 02:05 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் வியாழக்கிழமை (29)  இரவு ஏற்பட்ட தீ பரவல்  கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பரத்த, சமகி மாவத்தை பகுதியில் அமைந்துள்ள நிறப்பூச்சு உற்பத்தி கைத்தொழில்சாலையில் வியாழக்கிழமை (29)  இரவு சுமார் 11.30 மணியளவில் இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உடனடியாக செயற்பட்ட பாணந்துறை வடக்கு பொலிஸார், மொரட்டுவ  பிரதேச சபையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் 

உட்பட தீயணைப்பு பிரிவு மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து கடும்பிரயத்தனத்துக்கு மத்தியில்  தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

எவ்வாறாயினும்  குறித்த தொழிற்சாலை தீயில் முற்றாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் தீ பரவல் காரணமாக எந்தவித உயிர் சேதமும் பதிவாகவில்லை எனவும் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாணந்துறை வடக்கு  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41