டெல்ஹியின் வெற்றியில் கெப், ஜொனாசன், ஷஃபாலி பிரகாசிப்பு; மந்தனாவின் அரைச் சதம் வீண்

01 Mar, 2024 | 03:05 PM
image

(நெவில் அன்தனி)

பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (29) இரவு நடைபெற்ற மகளிர் பீறிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 25 ஓட்டங்களால் டெல்ஹி கெப்பிட்டல்ஸ்  அணி  வெற்றிகொண்டது.

மாரிஸ்ஆன் கெப், ஜெஸ் ஜொனாசன் ஆகியோரின் சகலதுறை ஆட்டங்கள், ஷஃபாலி வர்மாவின் அதிரடி துடுப்பாட்டம் என்பன டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியை வெற்றிபெறச் செய்தன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 194 ஓட்டங்களைக் குவித்தது.

ஷஃபாலி முதாலவது ஓவரில் கொடுத்த இலகுவான பிடியை ஷ்ரியன்கா மேகனா தவறவிட்டது றோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனை சாதகமாக்கிக்கொண்டு அதிரடியில் இறங்கிய ஷஃபாலி வர்மா 31 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 3 பவண்டறிகளுடன் 50 ஓட்டங்களைக் குவித்ததுடன் அலிஸ் கெப்சியுடன் 2ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.

அலிஸ் கெப்சி 33 பந்துகளில் 46 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்களை விட மத்திய வரிசையில் மாரிஸ் ஆன்  கெப் 16 பந்துகளில் 32 ஓட்டங்களையும் ஜெஸ் ஜொனாசென் 16 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சொஃபி டிவைன் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நாடின் டி க்ளார்க் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  அணி   20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

அணித் தலைவி ஸ்ம்ரித்தி மந்தனா தனது வழமையான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 43 பந்துகளில் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 74 ஓட்டங்களைக் குவித்தார்.

மந்தனாவும் சொஃபி டிவைனும் முதலாவது விக்கெட்டில் 51 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

சொஃபி டிவைன் 23 ஓட்டங்களைப் பெற்றார்.

ஏனைய துடுப்பாட்ட வீராங்னைகளில் சபினேனி மேகான (36), ரிச்சா கோஷ் (16) ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜெஸ் ஜொனாசன் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மாரிஸ்ஆன் கெப் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அருந்ததி ரெட்டி 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22