கட்சி தலைவர் கூட்டத்துக்கு மத்திய வங்கியை அழைக்க தீர்மானம் - பாராளுமன்ற அலுவல்கள் குழு

01 Mar, 2024 | 01:36 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதன் பணியாளர்களின் சம்பளம் அதிகரிப்பு தொடர்பிலான காரணிகளை எடுத்துரைக்க மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதிகாரிகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (05)பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர் கூட்டத்துக்கு அழைக்கப்படவுள்ளனர்.

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (01) கூடியது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதன் சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் அவர்களின் தரப்பு நிலைப்பாட்டை கோருவதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட உயர் அதிகாரிகளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர் கூட்டத்துக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதன் பணியாளர்களின் சம்பளம் 70 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு ஆளும் மற்றும் எதிர்தரப்பின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி, மத்திய வங்கியின் ஆளுநரை பாராளுமன்றத்துக்கு அழைத்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

புதிய மத்திய வங்கி சட்டத்துக்கு அமைய மத்திய வங்கி சுயாதீனப்படுத்தப்பட்டுள்ளதால் சம்பள விவகாரத்தில் தலையிட முடியாது என நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் இலங்கை மத்திய வங்கியின் நிர்வாக சபையின் அங்கீகாரத்துடனும் தொழிற்சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே தமது ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சம்பள அதிகரிப்பு தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்க மத்திய வங்கி தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை இதுகுறித்து விளக்கமளிப்பதற்காக எழுத்து மூல அவகாசம் கோருமாறு நிர்வாக சபையினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக நிதியமைச்சராக கடமையாற்றும் ஜனாதிபதிக்கு கடந்த  மாதம் 22ஆம் திகதி  மத்திய வங்கி ஆளுநர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.இவ்வாறான பின்னணியின் தான் மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதிகாரிகள் கட்சித் தலைவர் கூட்டத்துக்கு முன்னிலையாகவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28
news-image

ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிக்கும்...

2025-02-11 17:21:24
news-image

அரச சேவையில் 7,456 பதவி வெற்றிடங்கள்...

2025-02-11 17:22:36
news-image

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி...

2025-02-11 17:04:54
news-image

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் விடுத்துள்ள...

2025-02-11 16:25:59
news-image

வவுனியாவில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞன்...

2025-02-11 16:23:23
news-image

திருகோணமலையில் நான்கு வலம்புரிச் சங்குகளுடன் மூவர்...

2025-02-11 16:15:00
news-image

முச்சக்கரவண்டி மோதி ஒருவர் உயிரிழப்பு ;...

2025-02-11 16:10:33
news-image

புதிய மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தை...

2025-02-11 16:45:37
news-image

கஞ்சா, ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-11 16:02:43
news-image

நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது - இலங்கை...

2025-02-11 15:52:31