நெதர்லாந்துடனான இராஜதந்திர உறவுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து அதிர்ச்சியளித்திருக்கிறது துருக்கி. இதை வெளிப்படுத்தும் வகையில், துருக்கிக்கான நெதர்லாந்துத் தூதுவருக்கு நாட்டினுள் நுழைய அனுமதி மறுத்திருக்கிறது துருக்கி. இந்த அறிவித்தலை துருக்கி பிரதமர் நுமான் குர்த்துல்மஸ் வெளியிட்டுள்ளார்.

நெதர்லாந்தில் கடந்த வாரம் அரசியல் ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. இதில் துருக்கி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலந்துகொள்ள விரும்பினார். இருந்தபோதும் அவருக்கு அனுமதியளிக்க நெதர்லாந்து அரசு மறுப்புத் தெரிவித்துவிட்டது.

இதனால் பெரிதும் அதிருப்தியடைந்த அந்த அமைச்சர், இதற்கான விளக்கத்தை அளிக்குமாறு நெதர்லாந்தைக் கேட்டிருந்தார். எனினும் அதற்கு நெதர்லாந்து மௌனம் காத்து வந்தது.

இதனால் வெகுண்ட துருக்கி, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அந்நாட்டுத் தூதுவருக்கு அனுமதி மறுத்துள்ளது.

இதனிடையே, துருக்கி அமைச்சருக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, குறித்த அரசியல் ஊர்வலத்தில் மோதல்களும் இடம்பெற்றுள்ளன.