தென் கொரிய மருத்துவ சங்க அலுவலகங்களில் பொலிஸார் முற்றுகை

Published By: Sethu

01 Mar, 2024 | 11:59 AM
image

கொரிய மருத்துவர்கள் சங்கத்தின் அலுவலகங்கள் மீது தென் கொரிய பொலிஸார் இன்று முற்றுகைகளை நடத்தினர்.  தென் கொரிய மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தால் வைத்தியசாலைகளில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இம்முற்றுகைகள் இடம்பெற்றுள்ளன.

சுமார் 10,000 கனிஷ்ட மருத்துவர்கள் கடந்த வாரம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.  மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்படும் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக கனிஷ்ட மருத்துவர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளர்ஃ 

மருத்துவர்கள் நேற்று வியாழக்கிழமைக்கு முன்னர் பணிக்குத்  திரும்ப வேண்டுமென தென் கொரிய அரசாங்கம் காலக்கெடு விதித்திருந்தது. 

பணிக்குத் திரும்பியவர்கள் தொடர்பான உத்தியோகபூர்வ தரவுகள் எதுவும் இல்லை என தென் கொரிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், பகிஷ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்தும் பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றன்ர என யோன்ஹாப் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. 

கடந்த வாரம் 15 பெரிய வைத்தியசாலைகளில் திட்டமிடப்பட்டிருந்த 50 சதவீதமான சத்திரசிகிச்சைகள் இரத்துச் செய்யப்பட்டதாக தென் கொரிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்க தங்க சுரங்கத்திலிருந்து 70க்கும் அதிகமான...

2025-01-15 14:04:28
news-image

ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை விடுவிக்க...

2025-01-15 13:32:17
news-image

யுத்தநிறுத்த உடன்படிக்கையில் இஸ்ரேல் கைச்சாத்திடும் வரை...

2025-01-15 12:31:56
news-image

யுத்தநிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிலையில் இஸ்ரேல்...

2025-01-15 11:11:31
news-image

சீனாவின் ஊடக நிறுவனங்களுடன் இலங்கை அரசாங்கம்...

2025-01-15 10:41:45
news-image

அவுஸ்திரேலியாவில் கரை ஒதுங்கும் உருண்டை வடிவிலான...

2025-01-15 09:25:20
news-image

தென்கொரிய ஜனாதிபதி சற்று முன்னர் கைது

2025-01-15 08:13:44
news-image

தென்கொரிய ஜனாதிபதியை கைதுசெய்ய மீண்டும் முயற்சி-...

2025-01-15 07:05:42
news-image

தென்னாபிரிக்காவின் தங்க சுரங்கத்தில் சட்டவிரோதமாக அகழ்வில்...

2025-01-14 11:34:11
news-image

ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்;...

2025-01-13 19:48:36
news-image

பள்ளி மாணவரின் மர்ம மரணத்தை கண்டித்து...

2025-01-13 09:56:38
news-image

உத்தர பிரதேசத்தின் கன்னவுஜ் ரயில் நிலைய...

2025-01-13 10:03:33