தெஹிவளை வடக்கு லயன்ஸ் கழகத்தின் அகில இலங்கை கட்டுரைப் போட்டிக்கான விருதுகளை வென்ற தமிழ் மாணவ ,மாணவிகள்

01 Mar, 2024 | 03:14 PM
image

தெஹிவளை வடக்கு லயன்ஸ் கழகத்தின் 30ஆம் ஆண்டு அகில இலங்கை கட்டுரைப் போட்டியின் விருது வழங்கும் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (பெப். 18) கொழும்பு 7, வித்யா மாவத்தையில் உள்ள லயன்ஸ் கழகத்தின் செயற்பாட்டு மையத்தில் இடம்பெற்றது.

"போதைப்பொருள் துஷ்பிரயோக தடுப்பு” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கட்டுரைப் போட்டியானது 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக மும்மொழிகளிலும் நடத்தப்பட்டது.

இதில் தமிழ்மொழி மூல கட்டுரைப் போட்டியில் மூதூர் முஸ்லிம் பெண்கள் கல்லூரியின் மாணவி முகம்மது ஃபசீத் பாத்திமா ஷாபா 1ஆம் பரிசையும், வவுனியா ஸ்ரீ சைவப்பிரகாச பெண்கள் கல்லூரியின் மாணவி கிருஸ்ணமூர்த்தி அபிராமி 2ஆம் பரிசையும், மூதூர் முஸ்லிம் பெண்கள் கல்லூரியின் மாணவி அலாவுதின் பாத்திமா இஸ்தா 3ஆம் பரிசையும், புனித சேவியர் பெண்கள் கல்லூரியின் மாணவி கவிநயா அன்தனிதாசன் 4ஆம் பரிசையும், சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மஹா வித்தியாலயத்தின் மாணவன் ஸ்ரீதரன் பயோதரன் 5ஆம் பரிசையும் பெற்றிருந்தனர்.

பட விளக்கம்:

இடமிருந்து வலம் : தெஹிவளை வடக்கு லயன்ஸ் கழக மாவட்டம் 306 A2இன் முன்னாள் ஆளுநர் லயன் துமிந்த முனசிங்க, தெஹிவளை வடக்கு லயன்ஸ் கழக மாவட்டம் 306 A 2இன் ஆளுநர் லயன் நுவன் இந்துனில் பலன்துடாவ, போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் லயன் எஸ். இராமச்சந்திரன், வைத்திய கலாநிதி சரத் சமரகே மற்றும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிடெட்டின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன் ஆகியோருடன் மாணவர்கள் பின்னால் நிற்பதையும் காணலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08
news-image

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை...

2024-04-09 14:10:46
news-image

USKU அமைப்பின் சர்வதேச பொதுக்கூட்டம் 2024

2024-04-09 12:56:17