பொலிஸாருக்கு சட்ட உதவிகளைப் பெற நிதியுதவி

Published By: Vishnu

29 Feb, 2024 | 08:04 PM
image

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சட்ட உதவி வழங்கும் "சட்ட நிவாரணத் திட்டத்திற்கு" பொலிஸ் சட்ட உதவி நிதியத்திலிருந்து நிதியுதவி வழங்க புதிய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அனுமதி வழங்கியுள்ளார்.

பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.  

பொலிஸார் தங்கள் கடமைகளைச் செய்யும் போது எதிர்கொள்ளும் சட்டச் சிக்கல்களுக்காகத் தனிப்பட்ட சட்ட உதவியைப் பெற இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதுடன், இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது கடமைகளின் எல்லைக்குள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட சிக்கல்களுக்கு முகங்கொடுக்கும் பட்சத்தில் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் அதற்கு அரசாங்க சட்ட உதவியை வழங்க மறுக்கும் அல்லது அது தொடர்பான சட்ட உதவிகளை வழங்காத சந்தர்ப்பங்களில், ஒரு தனியார் சட்டத்தரணி மற்றும் பிற சட்ட சேவைகளின் உதவியைப் பெறுவதற்கு பொலிஸார் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிகளுக்கு இந்த அனுமதி மூலம் நிவாரணம் கிடைக்கவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

2025-02-10 20:57:38
news-image

நிறுவனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை மேம்படுத்த அரச தனியார்...

2025-02-10 17:47:33
news-image

8 வாரங்களாக நிலைமை குறித்து அறிந்திருந்தும்...

2025-02-10 17:44:05
news-image

தனது இயலாமையை மறைத்துக் கொள்ள உயிரினங்களை...

2025-02-10 17:48:14
news-image

யு.எஸ்.எ.ஐ.டி நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றுக்...

2025-02-10 17:41:18
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள்...

2025-02-10 19:00:18
news-image

ரணில் - சஜித் விரைவாக ஒரு...

2025-02-10 17:33:37
news-image

மட்டக்குளியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது !

2025-02-10 18:59:30
news-image

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு...

2025-02-10 19:30:08
news-image

தமிழ்த்தேசியக்கட்சிகள் பொதுக்குறிக்கோளின் அடிப்படையில்; புதிய கூட்டமைப்பை...

2025-02-10 19:19:25
news-image

அதுருகிரியவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-02-10 18:58:16
news-image

மாளிகாவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது !

2025-02-10 18:56:54