சார்லி குணச்சித்திர வேடத்தில் கலக்கும் 'அரிமாபட்டி சக்திவேல்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

29 Feb, 2024 | 07:08 PM
image

புதுமுக நடிகர் பவன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'அரிமாபட்டி சக்திவேல்' இடம் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'அரிமாபட்டி சக்திவேல்' எனும் திரைப்படத்தில் நடிகர் சார்லி, பவன் .கே, மேக்னா எலன், இமான் அண்ணாச்சி, கராத்தே வெங்கடேஷ், அழகு, செந்தி, ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜே பி மேன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மணி அமுதவன் இசையமைத்திருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி சாதிய ஒடுக்குமுறை பின்னணியில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைஃப் ஸ்டைல் கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பி. அஜீஷ் மற்றும் கே. பவன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னோட்டத்தில் நடிகர் சார்லியின் குணச்சித்திர நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மேலும் இதில் சாதிய ஒடுக்குமுறை பின்னணியில் காதல் படும் பாடு இடம் பிடித்திருப்பதால் இளைய தலைமுறையினரையும் ஈர்த்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35