பான் இந்திய திரைப்படமாக உருவாகும் நடிகர் முனி கிருஷ்ணாவின் 'சத்தியமங்கலா'

29 Feb, 2024 | 07:05 PM
image

'கோலி சோடா' படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் முனி கிருஷ்ணா கதையின் நாயகனாக நடிக்கும் 'சத்தியமங்கலா' எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி பான் இந்திய திரைப்படமாக தயாராகி வருகிறது என படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் ஆரியன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சத்தியமங்கலா' எனும் திரைப்படத்தில் முனி கிருஷ்ணா, பொலிவுட் நடிகை கனக் பாண்டே, பொலிவுட் நடிகர் அர்பாஸ் கான், ராதா ரவி, சரிதா, ரவி காலே, ரெடின் கிங்ஸ்லீ, 'பாகுபலி' பிரபாகர், விஜய் சிந்தூர், சஞ்சய் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷங்கர் ஆராத்யா ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு வீர் சமர்த் இசையமைக்கிறார். அடர்ந்த காடுகளின் பின்னணியில் அட்வென்ச்சர் திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஏ எஸ் ஏ புரொடக்ஷன் மற்றும் அயிரா புரொடக்ஷன்ஸ் ஆகிய பட நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் பி. சங்கர் மற்றும் சசிரேகா நாயுடு ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இலங்கை, பாங்காக், நேபாளம் ஆகிய நாடுகளிலும், இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநில எல்லையோரத்தில் உள்ள அடர்ந்த வனப் பகுதிகளிலும்  நடைபெற்று நிறைவடைந்து இருக்கிறது. விரைவில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக் குழுவினர், அதன் வரவேற்பினை கண்டு உற்சாகம் அடைந்துள்ளனர். விரைவில் இப்படத்தின் மோசன் போஸ்டர் மற்றும் டீசர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இயக்குநர் ஆரியன் சர்வதேச அளவில் அதிவேகமாக ஆவண படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்தவர் என்பதும், அவர் இயக்கிய குறும்படத்திற்காக சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றவர் என்பதும், அவருடைய இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக 'சத்தியமங்கலா' உருவாகி வருவதாலும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் எழுந்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03
news-image

ரசிகர்களையும் தொண்டர்களையும் விசில் போட சொல்லும்...

2024-04-15 16:43:48
news-image

ராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ஹண்டர்'

2024-04-15 16:44:20
news-image

ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்'...

2024-04-15 16:29:01
news-image

மக்கள் செல்வன்: விஜய் சேதுபதி -...

2024-04-15 03:14:19
news-image

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின்...

2024-04-12 01:09:32
news-image

அமீரின் தேர்தல் கால முழக்கமாக ஒலிக்கும்...

2024-04-11 21:33:36
news-image

நடிகர் அவினாஷ் நடிக்கும் 'நாகபந்தம்' டைட்டில்...

2024-04-11 02:21:33
news-image

சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான்...

2024-04-11 02:17:58
news-image

நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நடிக்கும்...

2024-04-11 02:01:18