ஊர்வசி நடிக்கும் 'ஜே. பேபி' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

29 Feb, 2024 | 07:02 PM
image

தமிழ் திரையுலகில் வயதான பெண்மணிகளை மையப்படுத்தி திரைப்படங்கள் உருவாகி வெளியாவது மிக மிக அரிது. இந்தக் குறையை களைவதற்காக திறமை மிக்க நடிகை ஊர்வசியின் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜே பேபி' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு எதிர் வரும் மார்ச் 8ஆம் திகதி உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகிறது.

அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஜே பேபி' எனும் திரைப்படத்தில் 'அட்டக்கத்தி' தினேஷ், மாறன், ஊர்வசி, கவிதா பாரதி, ஜெயமூர்த்தி, ஏழுமலை, தக்ஷா, இஸ்மத் பானு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டோனி பிரிட்டோ இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி டிராமா ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஸ்டாஸ் மீடியா, நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னோட்டத்தில் கதையின் நாயகியான ஊர்வசியை அவர்களது வாரிசுகள் தொலைத்து விடுவதும், பின்பு அவர்களை தேடுவதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் படத்தைப் படமாளிகைகளில் காண வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

இதனிடையே இயக்குநர் ராகவன் இயக்கத்தில் விமல்- ராஜ்கிரன் நடிப்பில் வெளியான 'மஞ்சப்பை' எனும் திரைப்படத்தில், விமலின் தாத்தாவான ராஜ்கிரன் தொலைந்து போவதும்... அவரை தேடி விமல் பயணிப்பதும் என கதை அமைந்திருக்கும் என்பதும், இதைத்தொடர்ந்து இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு - பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான '60 வயது மாநிறம்' எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபுவின் தந்தையான பிரகாஷ்ராஜ் தொலைந்து போவதும், பிறகு அவரைத் தேடி விக்ரம் பிரபு பயணிப்பதும் என கதை அமைந்திருக்கும் என்பதும், அந்த வகையில் 'அட்டகத்தி' தினேஷ் மற்றும் மாறன் ஆகியோர் தங்களின் தாயான ஊர்வசியை தொலைப்பதும், பிறகு அவரைத் தேடி அலைவதும் என 'ஜே. பேபி' படத்தின் கதை அமைந்திருப்பதாலும், பாசம் காட்டிய தாயை முதுமையான வயதில் தனியாக தவிக்க விட்ட கதையை வலியுடன் பேசுவதாலும், முதன் முதலாக வயதான பெண்மணி கதாபாத்திரம் கதையின் நாயகியாக வடிவமைக்கப்பட்டிருப்பதாலும், இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03
news-image

ரசிகர்களையும் தொண்டர்களையும் விசில் போட சொல்லும்...

2024-04-15 16:43:48
news-image

ராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ஹண்டர்'

2024-04-15 16:44:20
news-image

ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்'...

2024-04-15 16:29:01
news-image

மக்கள் செல்வன்: விஜய் சேதுபதி -...

2024-04-15 03:14:19
news-image

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின்...

2024-04-12 01:09:32
news-image

அமீரின் தேர்தல் கால முழக்கமாக ஒலிக்கும்...

2024-04-11 21:33:36
news-image

நடிகர் அவினாஷ் நடிக்கும் 'நாகபந்தம்' டைட்டில்...

2024-04-11 02:21:33
news-image

சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான்...

2024-04-11 02:17:58
news-image

நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நடிக்கும்...

2024-04-11 02:01:18