'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் வணிக ரீதியான வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு, 'இங்க நான் தான் கிங்கு' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'உலக நாயகன்' கமல்ஹாசன் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'இங்க நான் தான் கிங்கு' படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியிருக்கிறார். சந்தானம் பிரியா லயா, தம்பி ராமையா, மறைந்த நடிகர் மனோபாலா, முனிஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் சுஷ்மிதா அன்பு செழியன் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் ஜி. என். அன்பு செழியன் வழங்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான சந்தானத்தின் மகிழ்ச்சியான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது மேலும் இந்த திரைப்படம் எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM