இலங்கையின் தேசியக் கொடியுடன் சென்றுகொண்டிருந்த எரிபொருள் தாங்கிக் கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

அபய சமிக்ஞையைப் பிறப்பித்த குறித்த கப்பல், தனது கண்காணிப்பு அமைப்பை செயலிழக்கச் செய்திருப்பதுடன் தனது பயணத் தடத்தை சோமாலியா நோக்கித் திருப்பியிருப்பதாலுமே இந்தச் சந்தேகம் எழுந்துள்ளதாக கடற்கொள்ளை ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தமது கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில், 2012ஆம் ஆண்டுக்குப் பின் வணிகக் கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியிருப்பது இதுவே முதன்முறையாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இரண்டு சிறு படகுகள் பின்தொடர்வதாக நேற்று (13) குறித்த கப்பலின் கெப்டன் தகவல் தந்த சில மணி நேரங்களுக்குள் கப்பல் காணாமல் போயுள்ளது தமது சந்தேகத்தை அதிகரித்திருப்பதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.