கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டத்துக்கு தயங்க மாட்டோம் - தென்கிழக்கு பல்கலை ஊழியர் சங்க தலைவர்

29 Feb, 2024 | 09:49 PM
image

ரே நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு தரப்பினருக்கு சம்பள அதிகரிப்பை வழங்கிவிட்டு, எங்களுக்கு வாக்குறுதி தந்து அரசு ஏமாற்றி வருகிறது. எங்களது விடயத்தில் அரசு பாகுபாடாக நடந்துள்ளமை அப்பட்டமான உண்மை என தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் தெரிவித்துள்ளார். 

இந்த நிலை நீடிக்குமானால் நாங்கள் தொடர் போராட்டம் நடத்துவதை விட வேறு வழியில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் சம்மேளனம் முன்னெடுத்துள்ள தொடர்ச்சியான இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தின் இரண்டாம் நாளான இன்று (29) தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் தங்களது போராட்டத்தை சம்மாந்துறையில் அமைந்துள்ள  பிரயோக விஞ்ஞான பீடத்தின் நுழைவாயிலில் முன்னெடுத்தனர்.

கல்விசாரா ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீனின் தலைமையிலும் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம். முகமது காமிலின் வழிகாட்டலிலும் இடம்பெற்ற இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் இரண்டாம் நாளிலும் பெருமளவிலான ஊழியர்கள் பங்கு கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த தாஜுடீன், 

எங்களது போராட்டம் வாழ்வாதாரத்துக்கான போராட்டம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலை காரணமாக எங்களது ஊழியர்கள் தங்களது வாழ்வை கொண்டுசெல்ல மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். 

ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு தரப்பினருக்கு சம்பள அதிகரிப்பை வழங்கிவிட்டு, எங்களுக்கு வாக்குறுதி அளித்து அரசு ஏமாற்றி வருகிறது. 

எங்களது விடயத்தில் அரசு பாகுபாடு காட்டியுள்ளமை அப்பட்டமான உண்மை. 

இந்த நிலை நீடிக்குமானால் நாங்கள் தொடர் போராட்டம் நடத்துவதை விட வேறு வழியில்லை என்றார். 

இன்றைய போராட்டத்தின்போது ஊழியர்கள் 'வாக்களிக்கப்பட்ட 107% சம்பள அதிகரிப்பை வழங்கு', 'உறுதியளித்த 25% MCA கொடுப்பனவை வழங்கு' என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து,  அரசாங்கம் அவற்றுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர். 

அத்தோடு, 'இங்கு ஒற்றுமையே பலம்', 'சமத்துவமே எம் தேவை', 'அரசாங்கமே கண் விழித்துப் பார்', '8 வருட ஏமாற்றம் இன்னும் தொடருமா?', 'வேண்டாம் வேண்டாம் பாகுபாடு வேண்டாம்', 'புத்திஜீவிகளை உருவாக்கும் அரச ஊழியர்களாகிய நாங்கள் நடுத்தெருவில்' போன்றவாறும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

இப்போராட்டம் காரணமாக இன்று இடம்பெறவிருந்த 12ஆவது சர்வதேச ஆய்வரங்கு அடுத்த தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41