பங்களாதேஷுடனான தொடர்களில் திறமையை வெளிபடுத்த முடியும் என ஹசரங்க, மெண்டிஸ், தனஞ்சய நம்பிக்கை

29 Feb, 2024 | 02:55 PM
image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிரான சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியினர் இன்று வியாழக்கிழமை (29) பங்களாதேஷை  சென்றடைந்துள்ளனர்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமையத்தில் அதிகாலை நடைபெற்ற மத அனுஷ்டானங்களில் கலந்துகொண்ட பின்னர் இலங்கை அணியினர் இங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

ரி20 குழாத்தில் இடம்பெறும் பெரும்பாலான வீரர்கள் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் குழாம்களிலும் இடம்பெறுவதால் அவர்கள் மூன்று தொடர்களையும் நிறைவு செய்த பின்னரே நாடு திரும்புவர்.

ரி20 தொடரில் மட்டும் விளையாடும் வீரர்கள் ரி20 தொடர் முடிவில் நாடு திரும்புவர்.

இந்த மூன்று தொடர்களில் இலங்கை  திறமையை வெளிப்படுத்தும் என மூவகை கிரிக்கெட் அணிகளுக்கான தலைவர்கள் வனிந்து ஹசரங்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா ஆகியோர் நம்பிக்கையுடன் கூறினர்.

பங்களாதேஷுக்கு புறப்படுவதற்கு முன்னர் இலங்கையின் ரி20 கிரிக்கெட் அணித் தலைவர் வனிந்து ஹசரங்க கருத்து தெரிவிக்கையில்,

'ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னர் பங்களாதேஷுடனான ரி20 தொடரில் மாத்திரமே எமது  அணி  விளையாடவுள்ளது. எனவே இந்த 3 போட்டிகளிலும் திறமையாக விளையாடி வெற்றிபெற்று ரி20 உலகக் கிண்ணத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள எண்ணியுள்ளோம்.

'இரண்டு அணிகளையும் ஒப்பிடும்போது எமது அணி முன்னிலையில் இருக்கிறது. நாங்கள் மிகத் திறமையாக விளையாடினால் உலகில் உள்ள எந்தவொரு அணியையும் எதிர்கொள்ளக் கூடியதாக இருக்கும். அதற்கான நம்பிக்கையை தொடர்ந்து பேண வேண்டும்' என்றார்.

எவ்வாறாயினும் வனிந்து ஹசரங்கவுக்கு 2 சர்வதேச போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளதால் முதல் இரண்டு ரி20 போட்டிகளில் அவருக்குப் பதிலாக உதவி அணித் தலைவர் சரித் அசலன்க அணித் தலைவராக செயற்படுவார். கடைசிப் போட்டியில் ஹசரங்க மீண்டும் அணித் தலைமைப் பொறுப்பை ஏற்பார்.

சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடருக்குப் பின்னர் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் பங்களாதேஷை இலங்கை சந்திக்கவுள்ளது.

இந்நிலையில், பங்களாதேஷுக்கான கிரிக்கெட் விஜயம் தொடர்பாக பேசிய இலங்கையின் ஒருநாள் கிரிக்கெட் அணித் தலைவர் குசல் மெண்டிஸ்,

'பங்களாதேஷுக்கான கிரிக்கெட் விஜயமானது எமக்கு ஒரு முழுமையான கிரிக்கெட் விஜயமாக அமைகிறது. ஏனெனில் மூவகை சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளோம். அங்கு மிகத் திறமையாக விளையாட முடியும் என நம்புகின்றேன். எம்மில் பலர் பங்களாதேஷில் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளது எமக்கு அனுகூலமாக அமையும். வீரர்களின் மனநிலை சிறப்பாக இருப்பது அணிக்கு இன்னும் அதிகமான நம்பிக்கையைக் கொடுக்கிறது' என்றார்.

இலங்கையின் துடுப்பாடம் தற்போது சிறந்த நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

'எமது துடுப்பாட்டம் தற்போது பெரு முன்னேற்றம் அடைந்துள்ளது. இதற்கு முன்னர் எமது அணியில் முன்வரிசை பிரகாசித்தால் மத்திய வரிசை சரிவதையும் முன்வரிசை சரிந்தால் மத்திய வரிசை பிரகாசிப்பதையும் பார்த்துள்ளோம். ஆனால், இப்போது முன்வரிசை வீரர்களும் மத்திய வரிசை வீரர்களும் இணைந்து கணிசமான ஒட்டங்களைப் பெற்று இலங்கைக்கு வெற்றிகளை ஈட்டிக்கொடுத்து வருகின்றனர். அது வரவேற்கத்தக்கதும் நல்ல அறிகுறியுமாகும். எனவே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் எம்மால் மிகத் திறமையாக செயற்பட முடியும் என நான் நம்புகிறேன்' என குசல் மெண்டிஸ் மேலும் தெரிவித்தார்.

இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்கள் முடிவடைந்த பின்னர் 2 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் பங்களாதேஷை இலங்கை எதிர்த்தாடும்.

டெஸ்ட்  போட்டி   தொடர்பாக கருத்து வெளியிட்ட அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா,

'பங்களாதேஷ் அணியின் பலம், பலவீனம் ஆகியவற்றுக்கு ஏற்ப எமது திட்டங்களை வகுத்து தொடரை சிறப்பாக நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம்' என்றார்.

இந்தத் தொடருக்காக டெஸ்ட் குழாம் இன்னும் அறிவிக்கப்படவில்லை எனவும் இங்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்களே பெரும்பாலும் டெஸ்ட் குழாத்தில் இடம்பெறுவர் எனவும் அவர் கூறினார்.

'தற்போது நாங்கள் உடற்தகுதிக்கான பயிற்சிகளிலேயே ஈடுபட்டுவருகிறோம். டெஸ்ட் போட்டிக்கு இன்னும் பல நாட்கள் இருப்பதால் துடுப்பாட்ட பயிற்சிகளை பின்னர் ஆரம்பிக்கவுள்ளோம்.

'பங்களாதேஷ் ஒரு சிறந்த அணி. அவர்கள் கடந்த சில வருடங்களில் திறமையாக    விளையாடி வந்துள்ளனர். நாங்கள் அதிசிறந்த வீரர்களை அணியில் இணைத்துக்கொண்டு டெஸ்ட் தொடரை எதிர்கொள்வோம்' என தனஞ்சய டி சில்வா தெரிவித்தார்.

இலங்கை குழாம்

வனிந்து ஹசரங்க (தலைவர் - முதலிரண்டு போட்டிகளில் விளையாடத் தடை), சரித் அசலன்க (உதவித் தலைவர் - முதல் இரண்டு போட்டிகளில் பதில் தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, சதீர சமரவிக்ரம, அக்கில தனஞ்சய, தனஞ்சய டி சில்வா, ஏஞ்சலோ மெத்யூஸ், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக்க, பினுர பெர்ணாண்டோ, டில்ஷான் மதுஷன்க, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரண, நுவன் துஷார, ஜெவ்றி வெண்டசே.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22