கல்வி அமைச்சு மற்றும் பொதுச்சேவை ஆணைக்குழுவின் விதிகளுக்கு அமையவே அதிபர் நியமனம் இடம்பெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
யாழ். மத்திய கல்லூரியின் அதிபர் நியமனம் தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும்போதே மேற்கண்டவாறு பழைய மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இது தொடர்பாக மேலும் கூறுகையில்:-
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் என்பது 1909ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.
இன்று வரை அந்த சங்கம் எதுவித பிரச்சினையும் இன்றி தொடர்ச்சியாக இயங்கி வருகிறது.
புதிய பதில் அதிபர் பதவியேற்றதன் பின்னர், சில காரணங்களுக்காக பழைய மாணாக்கர் சங்கம் என்ற பெயரில் இன்னொரு அமைப்பு உருவாக்கப்பட்டது.
அந்த சங்கத்துக்கும் எமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அவர்கள் உருவாக்கியது பழைய மாணாக்கர் சங்கம். இது கடந்த ஆறு மாதத்துக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும். இது சம்பந்தமான வழக்கு கூட தற்பொழுது நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.
பழைய மாணவர் சங்கமாகிய நாங்களே தற்பொழுது புதிதாக உருவாக்கப்பட்ட பழைய மாணாக்கர் சங்கத்துக்கு எதிராக வழக்கினை தாக்கல் செய்துள்ளோம்.
பழைய மாணவர் சங்கத்தை பொறுத்தவரையில் நாங்கள் இவர்தான் அதிபராக வரவேண்டும்; அவர்தான் அதிபராக வரவேண்டும் என்று எந்த ஒரு நிபந்தனையும் விதிக்கவில்லை.
எங்களைப் பொறுத்தவரையில் சட்ட திட்டங்களுக்கு அமையவாக கல்வி அமைச்சினதும் பொதுச் சேவை ஆணைக்குழுவினதும் விதிகளுக்கு அமைவாக ஓர் ஒழுங்குமுறையில் தெரிவு செய்யப்பட்ட அதிபர் வரவேண்டும் என்பதேயாகும்.
அவ்வாறான ஒருவரை நாம் ஆதரிப்போம். அதுவே எமது நிலைப்பாடாகவும் இருக்கிறது.
குறிப்பாக, இந்த அதிபர் விடயத்தில் நாங்கள் தாய் சங்கமாக இருக்கிறோம்.
கனடா மற்றும் இங்கிலாந்து, கொழும்பைச் சேர்ந்த எமது பழைய மாணவர் சங்கங்களும் எமது நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
118 வருடங்கள் பழமையான சங்கமும் எமது சங்கமாகும். ஆகவே, எமது செயற்பாடுகள் பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் அமைய வேண்டும். அதுவே எமது நிலைப்பாடாகும் என தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM