பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் உள்ள குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவினரிடம் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன வாக்குமூலமளித்துவருகின்றார்.

இவர் இன்று 3 ஆவது தடவையாக மத்திய வங்கி பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். 

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே இவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

இவர் நேற்று மற்றும் கடந்த வெள்ளிக்கிழமை போன்ற தினங்களில் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.