கொழும்பில் ஜவுளித் தொடர் கண்காட்சி இன்று ஆரம்பம்

29 Feb, 2024 | 10:30 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

CEMS-Global USAஇன் ஜவுளித் தொடர் கண்காட்சி (இலங்கைப் பதிப்பு) இன்று (29) முதல் மார்ச் 2ஆம் திகதி வரை கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா எக்ஸிபிஷன் கன்வென்ஷன் சென்டரில் (SLECC) நடத்தப்படவுள்ளதாக CEMS-குளோபல் USAஇன் குழு தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.எஸ். ஸர்வார் தெரிவித்தார்.

13ஆவது கொழும்பு சர்வதேச நெசவு செய்யப் பயன்படுகின்ற நூல் மற்றும் துணி கண்காட்சி - 2024, 43ஆவது Dye+Chem Sri Lanka  - 2024 சர்வதேச கண்காட்சி, ஜவுளி, ஆடைத் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்கள் தொடர்பான 11ஆவது Textech Sri Lanka - 2024 ஆகிய மூன்று வகையான சர்வதேச கண்காட்சி கொழும்பில் நடைபெறவுள்ளது. இதற்காக இலங்கையின் ஜவுளி மற்றும் ஆடைத் தொழில்துறை ஆகியன கொழும்பில் ஒன்றுகூடவுள்ளன.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகச் சந்திப்பு அண்மையில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

CEMS-Global USAஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியானது,  இத்துறையில் ஒத்துழைப்பை வளர்ப்பதையும், தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்துவதையும், துறைக்குள் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.எஸ் ஸர்வார் தெரிவித்தார்.

CEMS Global USA, அதன் B2B வர்த்தக கண்காட்சிகளுக்கு பெயர் பெற்று விளங்குகிறது. பங்களாதேஷ், பிரேஸில், மொராக்கோ, இலங்கை மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெறும் ஜவுளி தொடர் கண்காட்சிகள் மூலம் ஜவுளி மீது கவனம் செலுத்துகிறது. இது ஜவுளி மற்றும் ஆடைத் துறையின் உலகளாவிய உற்பத்தியாளர்களுக்கு சிறந்த தளத்தை வழங்குகிறது. சாத்தியமான சந்தை வாய்ப்பை உருவாக்குவதற்கும் இத்துறையில் புதுமைகளை  ஏற்படுத்துவதற்கும் சிறந்தவொரு தளமாக இது அமைகிறது. 

Textech Sri Lankaஇன் 11ஆவது பதிப்பு, ஜவுளி மற்றும் ஆடை இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத்துக்கான தளமாக அதன் பாரம்பரியத்தை தொடரும், இது உலகம் முழுவதிலும் இருந்து கண்காட்சியாளர்களை உள்ளடக்கியது மற்றும் புதுமைகளை முன்னிலைப்படுத்துவதாகும்.

இதேவேளை, 13ஆவது ஆடை நெய்ய பயன்படுகின்ற நூல் மற்றும் துணி கண்காட்சியில் பல்வேறு வகையான நூல்கள், துணிகள் மற்றும் தொடர்புடைய பொருட்கள், நவநாகரிக ஆடை, வீட்டு ஜவுளிகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிகள் ஆகியவற்றில் பல்வேறு உற்பத்திப் பயன்பாடுகளை வழங்குகின்றன.

இக்கண்காட்சிகளை நிறைவு செய்யும் வகையில் 43ஆவது Dyechem Sri Lanka International Expo, ஜவுளி மற்றும் ஆடைத்துறைக்கான சாயமிடுதல் மற்றும் இரசாயன செயலாக்கத்தில் தீர்வுகள் மற்றும் முன்னேற்றங்களை காட்சிப்படுத்தவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

APIITயின் ரோட்ராக்ட் கழகத்தின் 3ஆவது ஆண்டு...

2025-01-24 15:49:44
news-image

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினத்தை...

2025-01-23 21:09:21
news-image

யாழ். பல்கலையில் 'த நெயில்' சஞ்சிகை...

2025-01-23 18:28:12
news-image

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 4ஆவது இளங்கலை...

2025-01-23 17:53:48
news-image

செலான் வங்கியின் சூரியப்பொங்கல்

2025-01-22 12:52:42
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் ஆய்வு...

2025-01-22 09:05:55
news-image

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்...

2025-01-21 17:48:32
news-image

புனித குர்ஆன் மனனப் போட்டியின் இரண்டாம்...

2025-01-21 11:13:46
news-image

'அடையாளம்' கவிதை நூல் வெளியீடு

2025-01-20 15:49:31
news-image

கொழும்பு இந்து மகளிர் சங்கத்தினர் நடத்திய...

2025-01-20 15:24:39
news-image

காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய...

2025-01-20 13:13:22
news-image

கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர்...

2025-01-19 20:03:17