தற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்தில் இணைவதற்கு தாம் தயாரில்லையென முன்னாள் இலங்கைக் கிரிக்கெட் அணித் தலைவரும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கிரிக்கெட் நிர்வாகத்தில் இணைந்துகொள்ள வேண்டுமென இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முகாமையாளர் அசங்க குருசிங்க முன்வைத்த கோரிக்கைக்கு முதன் முறையாக பதிலளிக்கையிலேயே அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார்.
உடுகம்பலவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கிரிக்கெட் நிர்வாகத்தில் தலையிடுவதன் காரணமாக அசங்க குருசிங்கவினால் தன்னுடைய கடமைகளை உரியமுறையில் நிறைவேற்றுவதற்கு சந்தர்ப்பம்கிட்டாதென தெரிவித்தார்.
' கடந்த 20 ஆண்டுகளாக இந்நாட்டில் என்ன நடந்ததென அசங்க குருசிங்க அறிந்திருக்கவில்லை. எவ்வாறான அரசியல் தலையீடுகள் முன்னெடுக்கப்பட்டன. எவ்வாறான திருட்டுச் செயல்கள் இடம்பெற்றன. எவ்வாறான தவறிழைத்த நபர்கள் விளையாட்டில் ஈடுபட்டார்கள் என அசங்க குருசிங்க அறிந்திருக்கவில்லை.
தற்போதைய கிரிக்கெட் நிர்வாகிகள் தன்னுடைய கடமைகளை நிறைவேற்றுவதற்கு, குருசிங்கவிற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள். நிர்வாகத்தில் உள்ளவர்கள் அரசியல் தலையீடுகளை மேற்கொள்கின்றார்கள். அவர்களுடைய நண்பர்களின் பிள்ளைகளுக்கு விளையாட்டில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குகின்றார்கள். அண்மையிலும் இவ்வாறானதோர் சம்பவம் பதிவாகியது.
இந்நடவடிக்கை காரணமாக கிரிக்கெட் நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. தற் பொழுது முன்னாள் கிரிக்கெட் வீரர்களை பயன்படுத்தி தங்களுடைய சேறுகளை மறைக்க முயற்சிக்கும் செயன்முறையொன்று பின்பற்றப்படுகின்றது.
எனவே நான் மிகவும் பொறுப்புணர்வுடன் கூறவிரும்புவது யாதெனில், முன்னாள் வீரர்களான அரவிந்த, அசங்க, சனத் ஆகிய அனைவரும் கிரிக்கெட் விளையாட்டில் தவறொன்று இழைக்கப்படுமாயின் அத்தவறை சரிசெய்ய வேண்டும். இல்லையேல் அதிலிருந்து விலக வேண்டுமென்பதையே நான் விசேடமாக குறிப்பிடுகின்றேன்.
உலகக் கிண்ணத்தை வென்ற பலர் இன்று கிரிக்கெட் பயிற்சியாளர்களாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். எனவே எதிர் காலத்தில் எம்மாலும் உலகக் கிண்ணத்தை வெற்றி கொள்ளலாம். அதன் பொருட்டே இவ்வீரர்கள் வரவழைக்கப்படுகின்றார்கள். இவ்வீரர்களுக் குரிய சந்தர்ப்பங்களை வழங்கி வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டுமென அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM