குடிவரவு - குடியகல்வுத் திணைக்கள கண்டி பிராந்திய காரியாலயத்தில் சேவைகளை பெற்றுக்கொள்ள வரும் மக்களுக்கு அவர்களின் வருகைக்கு ஏற்ப இலக்கங்களை வழங்குவதற்கான முறையான ஏற்பாட்டுகள் இல்லாததினால் வரும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த இடத்திலிருந்து ஒரு நாள் சேவையின் கீழ் தினமும் 200 கடவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன, ஆனால் அந்த சேவையைப் பெறுவதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.
அலுவலகம் அமைந்துள்ள கண்டி - பேராதனை பிரதான வீதியில் செவ்வாய்க்கிழமை (27) மதியம் வரிசையில் நிற்கும் மக்கள், மறுநாள் காலை 8.00 மணிக்கு அலுவலகம் திறக்கும் வரை காத்திருக்கின்றனர்.
ஒரு நாள் சேவையின் கீழ் 200 இலக்கங்களும், வழமையான சேவையின் கீழ் 175 இலக்கங்களும் வழங்கப்படுவதுடன், இந்த இலக்கங்களைப் பெறுவதற்கு கடும் போட்டி நிலவுவதால், கட்டுகெலே, சுதுஹும்பொல பிரதேசவாசிகள் நள்ளிரவு முதல் வரிசையில் காத்திருப்பதாக தெரியவரும் அதேவேளை, சேவை பெற வரும் நபர்களிடம் 3000-5000 ரூபாய் வரையிலான தொகைகளுக்காக எண்களை விற்று மோசடி நடக்கின்றதாக தெரியவருகின்றன.
இந்த மோசடிக்கு அலுவலகத்தில் உள்ள சிலரும் துணைபோவதாகச் சந்தேகம் எழுந்துள்ளதாகச் சேவைகளைப் பெற வரும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தால், அதைப் பெறுவதற்கு சுமார் 06 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று அந்தச் சேவையைப் பெற வந்த நபர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.
இலக்கங்களை வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நேற்று (28) அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் குடிவரவு குடியகல்வு திணைக்கள கண்டி அலுவலக அதிகாரிகளின் அறிவித்தலின் பேரில் கண்டி பொலிஸ் தலைமையக பிரதான பரிசோதகர் ரசிக சம்பத் உள்ளிட்ட குழுவினர் சென்று அதை கட்டுப்படுத்தினர்.
கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக இரவு முழுவதும் விழித்திருக்கும் மக்களுக்கு இலக்கங்களை வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கண்டி பிராந்திய அலுவலக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் அலுவலகத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் திருமதி பண்டார மெனிகே அறிவிக்கையில் :
இலக்கம் வழங்குவது தொடர்பில் அலுவலகத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் நுழை வாயலுக்குவேளியே குவிந்திருந்த மக்கள் வரிசையில் சிறிது நேரம் பதற்றம் நிலவுவதாகக் கூறப்படுகிறது.
நுழைவாயிலுக்கு வெளியே அமைதிக்குக் குந்தகம் ஏற்படுமிடத்து அதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,என தெரிவித்துள்ள பிரதிக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்குள் ஒழுங்காக நுழைபவர்களுக்கு உரிய நடவடிக்கைகளைத் திணைக்களம் மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.
குருநாகல், மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பான சம்பவத்தால், அலுவலக பணிகள் ஒரு மணி நேரம் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டன எனவும் மேற்படி பிரதிக் கட்டுப்பாட்டாளர் தினமும் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை முன்பு இருந்ததைப் போலவே இருக்கும் என்றும் வலியுறுத்தினார்.
கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக இரவு முழுவதும் விழித்திருக்கும் மக்களுக்கு இலக்கங்களை வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கண்டி பிராந்திய அலுவலக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM