பங்களாதேஷுடனான முதல் இரண்டு ரி20 போட்டிகளில் இலங்கை அணித் தலைவர் அசலன்க ; பெத்துமுக்கு பதில் அவிஷ்க

Published By: Vishnu

28 Feb, 2024 | 11:55 PM
image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட்டில் மார்ச் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிகெட் தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளில் இலங்கை அணிக்கு பதில் தலைவராக சரித் அசலன்க பதவி வகிக்கவுள்ளார்.

இதற்கு அமைய சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் முதல் தடவையாக இலங்கை அணிக்கு சரித் அசலன்க தலைமை தாங்கவுள்ளார்.

ஆப்கானிஸ்தானுடனான 3ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி முடிவில் கள மத்தியஸ்தர் லிண்டன் ஹனிபலை சாடிய குற்றத்திற்காக வனிந்து ஹசரங்கவுக்கு 2 சர்வதேச ரி20 போட்டித் தடை விதிக்கப்பட்டது.

எனினும்  மூன்றாவது ரி20 கிரிக்கெட் போட்டியில் ஹசரங்க மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்பார்.

இதேவேளை, ஆப்கானிஸ்தானுடனான கடைசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது உபாதைக்குள்ளாகி ஓய்வு பெற்ற பெத்தும் நிஸ்ஸன்கவுக்கு உபாதையிலிருந்து மீளும்வரை ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

அவருக்குப் பதிலாக ஆரம்ப வீரர் அவிஷ்க பெர்னாண்டோ குழாத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவர் இரண்டு அரைச் சதங்களைக் குவித்து துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கும் நோக்கில் அவரை தெரிவாளர்கள் இணைத்துக்கொண்டுள்ளனர்.

சுழல்பந்துவீச்சாளர் ஜெவ்றி வெண்டசே இரண்டு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ரி20 குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். அவர் கடைசியாக 2022 பெப்ரவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக தம்புள்ளையில் விளையாடியிருந்தார்.

எவ்வாறாயினும் வனிந்து ஹசரங்கவுக்குப் பதிலாக முதல் இரண்டு போட்டிகளில் வெண்டசே விளையாடுவாரா அல்லது கமிந்து மெண்டிஸுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது போட்டிக்கு முன்னர் தீர்மானிக்கப்படும் என கருதப்படுகிறது.

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் சில்ஹெட் நகரில் நடைபெறும்.

முதலாவது போட்டி மார்ச் 4ஆம் திகதியும் 2ஆவது போட்டி 6ஆம் திகதியும் கடைசிப் போட்டி 9ஆம் திகதியும் நடைபெறும்.

இத் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியினர் வியாழக்கிழமை (29) அதிகாலை பங்களாதேஷை நோக்கி புறப்பட்டுச் செல்கின்றனர்.

இலங்கை குழாம்

வனிந்து ஹசரங்க (தலைவர் - முதலிரண்டு போட்டிகளில் இல்லை), சரித் அசலன்க (உதவித் தலைவர் - முதல் இரண்டு போட்டிகளில் பதில் தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, சதீர சமரவிக்ரம, அக்கில தனஞ்சய, தனஞ்சய டி சில்வா, ஏஞ்சலோ மெத்யூஸ், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக்க, பினுர பெர்ணாண்டோ, டில்ஷான் மதுஷன்க, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரண, நுவன் துஷார, ஜெவ்றி வெண்டசே.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22