சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலணி பகுதியில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (27) உயிரிழந்துள்ளார். மயிலணி வடக்கு சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த தேவராசா கமல்ராஜ் (வயது 39) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது வீட்டில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அயல் வீட்டிலிருந்து மின்சாரம் பெற்று தண்ணீர் மோட்டார் பயன்படுத்தியுள்ளார். இதனால் இவர் மின்சார தாக்குதலுக்கு உள்ளானார்.
இதன்போது அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM