பொதுஜன பெரமுனவை தலைமைத்துவமாக கொண்டு அரசியல் கூட்டணியை ஸ்தாபிப்போம் - ரஞ்சித் பண்டார

Published By: Vishnu

28 Feb, 2024 | 06:39 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மார்ச் மாதம் 05 ஆம் திகதிக்கு பின்னர் அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை தலைமைத்துவமாக கொண்டே புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபிப்போம் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அண்மையில் முன்னிலையாகிய திறைசேரியின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோர் நிதி வங்குரோத்து நிலையை நாங்கள் அறிவிக்கவில்லை என்று குறிப்பிட்டார்கள்.ஆனால் வங்குரோத்து நிலைக்கு ராஜபக்ஷர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுக் கொள்கிறார்.

பொருளாதார பாதிப்புக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் கிடையாது.சர்வதேச பிணைமுறியங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்களினால் நாட்டின் நிதி நிலைமை நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டது.

கொவிட் பெருந்தொற்று தாக்கத்துக்கு மத்தியில் பொருளாதார பாதிப்பின் ஒட்டுமொத்த பொறுப்பும் ராஜபக்ஷர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.பொருளாதார பாதிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு ராஜபக்ஷர்களை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டன.

கட்சி என்ற ரீதியில் பலமடைந்துள்ளோம். எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதிக்கு பின்னர் அரசியலில் எதிர்பாராத பல மாற்றங்கள் ஏற்படும். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை தலைமைத்துவமாக கொண்டே புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபிப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00