மர்ஹும் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் 4ஆவது நினைவு தினமும் நூல் அறிமுக நிகழ்வும் 

28 Feb, 2024 | 08:42 PM
image

இலங்கை ஒலிபரப்பாளர் ஒன்றியத்தின் ஆதரவில் மறைந்த ஒலி - ஒளிபரப்பாளரும் கல்வியலாளருமான மர்ஹும் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் நான்காவது வருட நினைவு தின நிகழ்வும், "ஏ.ஆர்.எம். ஜிப்ரி ஒரு சகாப்தம்" எனும் நூல் அறிமுக நிகழ்வும் எதிர்வரும் மார்ச் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் மாளிகைக்காடு பாபா ரோயலி வரவேற்பு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கை ஒலிபரப்பாளர் ஒன்றியத்தின் தலைவரும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளருமான சிரேஷ்ட ஒலி - ஒளிபரப்பாளர் யூ.எல். யாகூப் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், சர்வதேச புகழ் ஒலிபரப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் முன்னிலை வகிப்பதோடு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் முதன்மை அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக், கல்முனை பணிமனையின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹிலா எஸ். இஸ்ஸடீன், கல்முனை பொலிஸ் நிலைய தலைமையகப் பொறுப்பதிகாரி எம். றம்ஸீன் பக்கீர், கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை அதிபர் எஸ். கலையரசன் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பதிதிகளாகவும் கலந்துகொள்வர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் நிகழ்வில் நினைவுப் பேருரையை நிகழ்த்துவதோடு, இலங்கை ஒலிபரப்பாளர் ஒன்றியத்தின் செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.தாஜ் நூல் அறிமுக உரையையும் நிகழ்த்துவர்.

இலங்கை ஒலிபரப்பாளர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் சிரேஷ்ட ஒலி - ஒளிபரப்பாளர் மனிதநேயன் இர்ஷாத் ஏ. காதர் நிகழ்ச்சி நெறியாள்கையையும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபன பிறை எப்.எம். அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். நௌபீல் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பையும் செய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08
news-image

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை...

2024-04-09 14:10:46