நுவரெலியா மாவட்டத்திலும் சேவையை ஆரம்பித்தது லைக்கா - ஞானம் பவுண்டேசன்!

28 Feb, 2024 | 08:42 PM
image

"பசிக்கும் ஒருவனுக்கு மீன் வழங்குவதை விட, அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது சிறந்தது" எனும் தொனிப்பொருளில் "லைக்கா" மற்றும் இதன் இணை அமைப்பான "ஞானம் பவுண்டேஷன்" நுவரெலியா மாவட்டத்தில் அதன் முதல் சமூக அபிவிருத்தி திட்ட பணியை நேற்று (27) செவ்வாய்க்கிழமை அங்குரார்ப்பணம் செய்தது.

இது தொடர்பான நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலக அதிசய மண்டபத்தில் "லைக்கா, "ஞானம் பவுண்டேஷன்" தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட கலந்து கொண்டு இம்மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி பணிக்கான ஆரம்ப நிகழ்வினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

மேலும், இந்த நிகழ்வில் "லைக்கா மற்றும் ஞானம் பவுண்டேஷன்" சர்வதேச இணைப்பதிகாரி சைத்தனியா, மாவட்டத்தின் செயற் திட்ட முகாமையாளர் ஆர்.ஸ்ரீதரன், நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி திட்ட இணைப்பதிகாரி எம்.என்.யூசுப் ஆகியோருடன் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர், யுவதிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

சர்வதேசத்தில் இலங்கை உட்பட ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் இயங்கி வரும் "லைக்கா,ஞானம் பவுண்டேஷன்" இலங்கையில் வடக்கு,கிழக்கு பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு அமைய சமூக அபிவிருத்தி பணியினை அரச சார்பற்ற நிறுவனமாக செய்து வந்தது.

இந்த நிலையில் மலையக சமூகத்திற்கும் அபிவிருத்தி தேவைப்பாடுகள் உள்ளதன் காரணமாக நுவரெலியா மாவட்ட செயலாளரின் அழைப்புக்கு அமைய நுவரெலியா மாவட்டத்தில் முதன் முறையாக  "லைக்கா,ஞானம் பவுண்டேஷன்" முன்னெடுக்கப்படவுள்ள சமூக அபிவிருத்தி பணியை அங்குரார்பணம் செய்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இதனூடாக கல்வி, வாழ்வாதாரம், குடியிறுப்பு வசதிகள், சுகாதாரம் மற்றும் தொழில்வாய்ப்பு வசதிகள் என சமூக தேவைப்பாடு உணர்ந்து அதற்கான அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்ட செயற் திட்ட முகாமையாளர் ஆர்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-10 15:53:58
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் அங்குரார்ப்பண...

2025-02-10 17:39:29
news-image

சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு...

2025-02-10 11:59:51
news-image

கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது எழுதிய...

2025-02-09 17:21:48
news-image

கண்டியில் தைப்பூச இரதோற்சவத் திருவிழா

2025-02-09 11:25:27
news-image

அன்புவழிபுரத்தில் “அடையாளம்” கவிதை நூல் அறிமுக...

2025-02-09 13:55:14
news-image

இலங்கை சட்டக் கல்லூரி சட்ட மாணவர்களின்...

2025-02-08 23:32:46
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-07 19:48:31
news-image

அமிர்தலிங்கம் மங்கையர்க்கரசி நினைவு இல்லம் மற்றும்...

2025-02-07 21:16:39
news-image

ஆழ்வாப்பிள்ளை கந்தசாமியின் பவள விழா

2025-02-07 14:34:55
news-image

சதன்யன் அசோகனின் மிருதங்க அரங்கேற்றம்

2025-02-07 14:38:23
news-image

இந்திய தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின்...

2025-02-07 11:02:30