கண்டி - தெல்தோட்டை பல்லேகம பகுதியில் குடிநீர் வசதி

28 Feb, 2024 | 09:19 PM
image

கண்டி மாவட்டத்துக்குட்பட்ட கலஹா – தெல்தோட்டை பல்லேகம பகுதியில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இ.தொ.கா.,வின் உப தலைவரும், பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமியின் தீவிர முயற்சியால் இப்பகுதியில் வாழும் மக்களின் நீண்டநாள் கோரிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பாரத் அருள்சாமி கூறுகையில்,

அனைவருக்கும் சுத்தமான – சுகாதார பாதுகாப்பு மிக்க குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்காக காத்திரமான நடவடிக்கைகளை அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்னெடுத்து வருகிறார். அரச மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பங்களிப்புடன் மக்களுக்கு சிறந்த முறையில் குடிநீரை பெற்றுத் தர நாம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். 

பல்லேகம குடிநீர் திட்டம் ஊடாக 450க்கு அதிகமான குடும்பங்களுக்கும், பள்ளிவாசல் மற்றும் பாடசாலை உள்ளடங்கலாக அனைவருக்கும் பயன் பெற முடியும்.

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான  குடிநீர் தேவையை எனது வேண்டுகோளுக்கு அமைவாக குவைத் நாட்டின் அல்நூர் தொண்டு நிறுவனத்தின் ஊடாக பத்து மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

என்னுடைய கோரிக்கைக்கு அமைவாக வேலைத்திட்டத்தை நிறைவுபடுத்திக் கொடுத்த அல்நூர் தொண்டு நிறுவனத்துக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் பல வேலைத்திட்டங்களை  நாம் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளோம்” என்றார். 

இக்குடிநீர் திட்டத்தை மக்கள்மயப்படுத்தும் நிகழ்வில் அல்நூர் தொண்டு நிறுவனத்தின் தலைவர் அலியார், அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரகு இந்திரகுமார், பலேகம பள்ளிவாசல் தலைவர், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38
news-image

நாராஹேன்பிட்டியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து

2025-03-20 17:44:18
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; 107...

2025-03-20 17:28:45
news-image

யாழில் அதிக ஒலி எழுப்புவோருக்கு எதிராக...

2025-03-20 17:40:56
news-image

கராபிட்டிய வைத்தியசாலையில் கதிரியல் சிகிச்சைகள் ஸ்தம்பிதம்

2025-03-20 17:39:42
news-image

அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-20 17:28:26