பொதுநலவாய செஸ் போட்டியில் இலங்கைக்கு ஒரு தங்கம் உட்பட 11 பதக்கங்கள்

28 Feb, 2024 | 09:19 PM
image

(நெவில் அன்தனி)

மலேசியாவின் மேலகா சர்வதேச வர்த்தக நிலைய மண்டபத்தில்  நடைபெற்ற பொதுநலவாய செஸ் வல்லவர் போட்டியில் ஒரு தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கள் பதக்கங்களை இலங்கை வென்றெடுத்தது.

இப் போட்டி மலேசியா செஸ் சம்மேளனம் மற்றும்  பெசத்துவான் காதுர் மேலகா நிலையம் ஆகியவற்றினால் கடந்த 20ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை   நடத்தப்பட்டது.

அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இந்தியா, மலேசியா, மாலைதீவுகள், மோல்டா, மொரிஷியஸ், நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய 11 பொதுநலவாய அமைப்பு நாடுகள் பங்குபற்றிய இப் போட்டியில் பதக்கங்கள் நிலையில் இலங்கை 4ஆம் இடத்தைப் பெற்றது.

8 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான செஸ் போட்டியில் இலங்கை முழுமையான ஆதிக்கம் செலுத்தி தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய 3 பதக்கங்களையும் வென்றெடுத்தது.

இப் பிரிவில் 9 மொத்த புள்ளிகளில் 6.5 புள்ளிகளைப் பெற்ற நெதுமி டிஹன்சா பெரேரா தங்கப் பதக்கத்தை சுவீகரித்து சம்பியனானார். இதே பிரிவில் எலிஷா பெர்னாண்டொ  (6 புள்ளிகள்)    வெள்ளிப் பதக்கத்தையும் ஹாசினி ரணசிங்க  (5.5 புள்ளிகள்)       வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பிரிவில் வனீஷா ஓஷினி கோமஸ் 7.5 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

12 வயதுக்குட்பட்ட பகிரங்க பிரிவில் வினுக்க டிஹைன் விஜேரத்ன 7.5 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

பெண்களுக்கான பகிரங்க பிரிவில் போட்டியிட்ட ஜீ.பி.வை. விஜேசூரிய 9 புள்ளிகளில் 6.5 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப் பதக்கதை வென்றெடுத்தார். அத்துடன் பொதுநலவாய பகிரங்க செஸ் சம்பயின்ஷிப் தரவரிசையில் 13ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

18 வயதுக்குட்பட்ட பகிரங்க பிரிவில் இலங்கைக்கு வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

இப் பிரிவில் பெசாந்து ரஷ்மித்தா லியனகேயும் பிர்ஜேஷ் சரவணபவனும் தலா 6.5 புள்ளிகளைப் பெற்றபோதிலும் சமநிலை முறிப்பு முறைமையில்  ரஷ்மித்தா வெள்ளிப் பதக்கதையும் பிரிஜேஷ் சரவணபவன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

10 வயதுக்குட்பட்ட பகிரங்க பிரிவில் சேதிகா ஹன்சிரா சமரவீர 6 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கதை தனதாக்கிக்கொண்டார்.

16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பிரிவில் எசந்தி நிவன்சா (6 புள்ளிகள்), 18 வயதுக்குட்பட்ட பகிரங்க வேக நகர்வுப் பிரிவில் ஹரித்த ஹன்சன (11 புள்ளிகளில் 9) ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22