தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக வெளியிட்ட கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான நிஹால் தல்துவ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் மரண அச்சுறுத்தல் காரணமாகவே தான் வெளிநாடு சென்றதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்ட கொழும்பு குற்றப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் துமிந்த ஜயதிலக்க தெரிவித்துள்ளாார்.
அவருக்கு கொலைமிரட்டல் விடுத்தவர்களில் கஞ்சிபான இம்ரானும் ஒருவர் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,நிஹால் தல்துவ, குறித்த அச்சுறுத்தல் தொடர்பான ஒலி நாடாக்கள் குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளன எனக் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM