இலங்கையில் நீண்டகாலம் மோதலில் ஈடுபட்ட இரண்டு சமூகத்தினரும் மரபணுரீதியில் ஒத்ததன்மைகளை கொண்டுள்ளர்- ஆய்வில் தகவல்

Published By: Rajeeban

28 Feb, 2024 | 05:05 PM
image

இலங்கையில் நீண்டகால உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு பெரும் இனக்குழுக்களான சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் மரபணுரீதியில் ஒற்றுமையை கொண்டுள்ளனர் என்பது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

தென்னாசியாவின் வேறு எந்த சமூகத்தையும் விட இந்த இரு சமூகத்தவர்கள் மரபணுரீதியில் ஒன்றுமையை கொண்டுள்ளனர் எனவும்  ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

ஐசயன்ஸ் என்ற சஞ்சிகையில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்திய இலங்கை மரபணுநிபுணர்கள் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வு இலங்கையின் இனக்குழுக்களின் வரலாற்று தோற்றம் பற்றிய உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளதுடன் இந்த இரு சமூக குழுக்கள் மத்தியிலான சமூக ஊடாட்டங்கள் பற்றிய பல விடயங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.

இரண்டு சமூகங்களிற்குஇடையில் குறிப்பிடத்தக்க  கலாச்சார  மற்றும் மொழி வித்தியாசங்கள் உள்ளபோதிலும்  பல நூற்றாண்டுகளாக இரு சமூகங்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ள  இது மரபணுதொடர்பிற்கு காரணமாக அமைந்துள்ளது எனவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

பெரும்பான்மை சிங்கள சமூகமும் சிறுபான்மை சிங்கள சமூகமும்  இரத்தளக்களறி மிக்க மோதலில் ஈடுபட்ட போதிலும்  இது 2009 வரை தொடர்ந்த போதிலும்  இருசமூகங்கள் மத்தியில் நம்பிக்கையின்மையும்  பகையும் இன்னமும்காணப்படுகின்றது என  தெரிவித்துள்ள  பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் விலங்கியல் பீடத்தின் பேராசிரியர் கயனேஸ்வர் சபே நாங்கள் கண்டுபிடித்த விடயங்கள் மிகவும் புதிரானவையாக காணப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவில்  கொழும்பு பல்கலைகழக பேராசிரியர்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பெரும்பான்மை சிங்கள சமூகத்தினரும் சிறுபான்மை தமிழ் சமூகத்தினரும் 2500 வருடங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து சென்றவர்கள்  சிங்களவர்கள் இந்தியாவின் மேற்குபகுதியிலிருந்து சென்ற அதேவேளை  இலங்கை தமிழர்கள் தென்னிந்தியாவிலிருந்து சென்றார்கள் இரண்டும் ஒரே காலத்தில் இடம்பெற்றது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல நூறுவருடங்களாக இரண்டு சமூகத்தினரிடையேயும்மரபணுஓட்டம் காணப்பட்டது  இதுவே மரபணுதொடர்பிற்கு காரணமாக அமைந்துள்ளது  கொழும்பு பல்கலைகழகத்தின் சிரேஸ்ட விஞ்ஞானி  ஆர் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மரபணு தொடர்புபட்ட விடயங்களில் முன்னைய ஆய்வுகள் ஆழமானவையாக காணப்படவில்லை  இதன் காரணமாக அந்த ஆய்வுகள் முழுமையானவையாக காணப்படவில்லை என பேராசிரியர் சவுபே தெரிவித்துள்ளார்.

இந்தியாவின்  வடபகுதியை சேர்ந்தவர்களுக்கும் வடஇந்தியாவின்  ஏனைய நகரங்களை சேர்ந்தவர்களுக்கும்  இடையில் மரபணு ஒற்றுமைகள் காணப்படும் என தெரிவித்துள்ள ரணசிங்க  இலங்கை ஆய்வில்  தென்இந்திய மரபணு ஒற்றுமையை விட இந்தியாவின் மேற்குபகுதியுடன் மரபணு ஒற்றுமையை அதிகம் அவதானித்துள்ளோம்  எனவும் தெரிவித்துள்ள அவர் இது சிங்களவர்களிற்கும் மராத்தியர்களுக்கும் இடையிலான பொதுவான வேர்கள் குறித்து ஆராய்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சூழமைவில் காணப்படும்  இனமற்றும் மொழி எல்லைகளிற்கு அப்பால்  இலங்கை தமிழர்களிற்கும் சிங்களவர்களுக்கும் இடையில் மரபணு ஒற்றுமை உள்ளமையும்  இந்த ஆய்வின் மூலம் வெளிப்பட்டுள்ள  மிக முக்கியமான விடயம் என  ரணசிங்க தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41