இலங்கையைச் சேர்ந்த சிரேஷ்ட சிவில் அலுவலர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய நிலையத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இருவார கால திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் முசோரியில் ஆரம்பமாகியது.
இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சின் கீழான இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சித் திட்டம் 2024 பெப்ரவரி 26 ஆம் திகதி முதல் மார்ச் 8 ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.
பணிப்பாளர்கள், பிரதிப் பணிப்பாளர்கள், நகரசபை செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதி ஆணையாளர்கள், துணை காணி ஆணையாளர், மாகாண பணிப்பாளர்கள், உதவி பிரதம செயலர் மற்றும் மாகாண விளையாட்டு பணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் கடமையாற்றும் இலங்கையைச் சேர்ந்த 40 சிரேஸ்ட அலுவலர்கள் இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சித் திட்டமானது நல்லாட்சிக்கான தேசிய நிலையம், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை திணைக்களம் ஆகியவற்றால் நடத்தப்படுவதுடன் “குறைந்தபட்ச அரசு - அதிகபட்ச ஆட்சி” என்ற கொள்கையின் கீழ் அரசையும் மக்களையும் மேலும் நெருக்கமாக்குவதற்கான டிஜிட்டல் தொழில்நுட்ப முறைமைகளைத் தழுவும் வழிமுறைகள் குறித்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் ஆராயப்படும். ஆட்சி முறையினையும் பொது சேவை விநியோகத்தையும் மேம்படுத்துவதற்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கண்டுபிடிப்புகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
அனைவருக்கும் வசிப்பிடம், டிஜிட்டல் பாவனை, கரையோரப் பகுதிகளுக்கான அதீத கவனம் உட்பட அனர்த்த முகாமைத்துவம், பிரதமர் ஜன் ஆரோக்யா ஜோஜ்னா, பொது தனியார் பங்குடமைமை, ஸ்வாமித்வா திட்டம், GeM: ஆட்சி முறைமையில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவருதல், ஆதார் திட்ட அமுலாக்கம்: நல்லாட்சிக்கான ஓர் உந்துகோல், டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு, சுழற்சிப் பொருளாதாரம் மற்றும் தேர்தல் முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இந்தியா மேற்கொண்ட வெற்றிகரமான திட்டங்கள் குறித்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்பவர்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியுள்ளது. அத்துடன் இந்திரா காந்தி தேசிய வன அக்கடமி, மொரார்ஜி தேசாய் யோகா மையம், மற்றும் தாஜ் மஹால் போன்ற ஸ்தலங்களுக்கும் விஜயம் செய்யும் இக்குழுவினர் அவ்விடயங்கள் குறித்த அனுபவத்தைப் பெறுவதுடன் ஆட்சி முறை மற்றும் சமூக இயக்கவியல் குறித்து நேரடி அனுபவங்களையும் பெறவுள்ளனர்.
இந்திய அரசின் பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சின் கீழான நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை திணைக்களத்தின் ஒரு சுயாதீன நிறுவனமான நல்லாட்சிக்கான தேசிய நிலையமானது தேசிய மற்றும் சர்வதேச அளவில் பொதுக் கொள்கைகள் மற்றும் ஆட்சிமுறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றது.
அந்த அடிப்படையில் இந்திய வெளியுறவுத் துறையுடன் இணைந்து பங்களாதேஷ், கென்யா, தன்சானியா, டுனீசியா, சிசெல்ஸ், கம்பியா, மாலைதீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், லாவோஸ், வியட்னாம், நேபாளம், பூட்டான், மியன்மார், எதியோப்பியா, எரித்திரியா மற்றும் கம்போடியா போன்ற 17 நாடுகளின் சிவில் அலுவலர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM