குடிநீர் கிடைப்பதில்லை ; லிந்துலையில் மக்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 3

28 Feb, 2024 | 05:11 PM
image

லிந்துலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் கல்கந்தவத்தை தோட்ட மக்கள் தமது தேவைக்கு குடிநீர் கிடைப்பதில்லை என இன்று  (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

இது தொடர்பாக தெரியவருவதாவது,

2002 ம் ஆண்டு தேசிய வீடமைப்பு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால் அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தினூடாக தலவாக்கலை நகர மக்களுக்கு தினசரி 24 மணி நேரமும் நீர் விநியோக வேலைத்திட்டம் என்ற வேலைத்திட்டத்தில் தலவாக்கலை கிறேட்வெஸ்டன் கல்கந்தவத்தை மலை அடிவாரத்தில் ஆரம்பமாகும் (கல்லாறு) ஆற்றை ஒரு பகுதி மறித்து அணையிட்டு  அங்கிருந்து குழாய்கள் ஊடாக தலவாக்கலை நகருக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டது. 

சுமார்  21 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினூடாக கல்கந்தவத்தை மலை அடிவாரத்தில் ஆரம்பமாகும் (கல்லாறு) ஆற்றின் அணையை  ஒரு அடி உயர்த்தி தண்ணீரை சுத்திகரித்து மேலும் குழாய்களை பொருத்தி அதனூடாக தலவாக்கலை நகருக்கு குடிநீர் வழங்க வேலைத்திட்டமொன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தினால்  கல்கந்தவத்தை தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 250 குடும்பங்கள் பாதிக்கபடுவதாக அத்தோட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த வேலைத்திட்டத்தை உடனே நிறுத்துமாறும் முதலில் இங்கே வாழும் 250 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும்.

தமக்கு முதலில் குடிநீர் வழங்கிய பின்னரே  யாருக்கு வேண்டுமானாலும் அணையிட்டு தண்ணீரை கொடுங்கள் என அத்தோட்டத்தைச் சேர்ந்த மக்கள்,பாடசாலை மாணவர்கள் மற்றும் இதர தொழில் துறைகளுக்கு செல்வோர் ஒன்றிணைந்து நேற்று (28) கல்கந்தவத்தை வழிப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

இதன்போது தலவாக்கலை நகரைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் கல்கந்தவத்தை நீர் திட்டத்தினால் தமது தேவைக்கு தண்ணீர் கிடைப்பதில்லை என மக்கள் கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கடும் வரட்சி காரணமாக தமக்கும் தண்ணீர் இல்லை எனவும் கல்கந்தவத்தை தோட்டத்தில்  தற்போது சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், தங்களின் குடிநீர், விவசாயம் மற்றும் ஏனைய தேவைகளுக்கான இந்த நீரை பயன்படுத்துவதால் முதலில் எங்களுக்கு நீரை வழங்கியதன் பின்னர் எஞ்சிய நீரினை தலவாக்கலை பிரதேசத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41