1983 ஆம் ஆண்டு சிறை உடைப்பை மேற்கொண்டு புலிபாய்ந்தகல் பகுதியிலேயே முதலில் வந்திறங்கினேன் -  கடற்றொழில் அமைச்சர் 

28 Feb, 2024 | 05:09 PM
image

புலிபாய்ந்தகல் பகுதியை சுற்றாலாத்துறையாக்கும் திட்டம் இல்லை. அவ்வாறு செய்வதாக இருந்தால் கடற்தொழிலோடு சேர்ந்ததாக தான் இருக்குமே ஒழிய மக்களுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இடம்கொடுக்க போவதில்லை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

புலிபாய்ந்தகல் பகுதிக்கு இன்று புதன்கிழமை (28) காலை கள விஜயம் மேற்கொண்ட பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

1983 ஆம் ஆண்டு சிறை உடைப்பை மேற்கொண்டு புலிபாய்ந்தகல் பகுதியிலேயே முதலில் வந்து இறங்கியிருந்தேன். அதன் பின் இன்று தான் இவ்விடத்திற்கு வந்திருக்கின்றேன்.

இப்பகுதி மீனவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாக என்னிடம் முறையிட்டிருந்தார்கள். அவ்வாறு முறைப்பாடு கிடைத்தால் நேரில் சென்று பார்வையிடுவதுண்டு. சில நாட்கள் கடந்திருந்தாலும் இவ்விடத்திற்கு இன்று வந்திருக்கின்றேன்.

இவ் மாவட்டத்திற்கு ஆற்றல் மிகு பணிப்பாளர் ஒருவரை நியமித்திருக்கின்றேன். எந்தவித சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் இடம்கொடுக்க கூடாதென பணிப்புரையை எழுத்தில் அனுப்புமாறு கூறியிருக்கின்றேன்.

அத்தோடு காணி உரிமம் தொடர்பாகவும் கதைத்திருந்தார்கள். எழுத்து மூலம் அதனை கேட்டிருக்கின்றேன் அது கிடைத்த பின்பு அதனை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை - இத்தாலிக்கிடையில் இருதரப்பு விமான...

2025-01-21 17:33:12
news-image

2024 ஆம் ஆண்டில் 386 யானைகள்...

2025-01-21 17:12:31
news-image

மேற்கு கொள்கலன் முனையம் இரண்டுக்கான ஆலோசனை...

2025-01-21 17:31:50
news-image

அர்ச்சுனா எம்பியை கைது செய்ய நீதிமன்றம்...

2025-01-21 16:49:55
news-image

அம்பியூலன்ஸ் வண்டி - டிப்பர் வாகனம்...

2025-01-21 16:31:59
news-image

ஹிக்கடுவையில் போதைப்பொருள், தோட்டாக்களுடன் நடனக் கலைஞர்...

2025-01-21 16:05:58
news-image

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் 06...

2025-01-21 15:53:35
news-image

03 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன்...

2025-01-21 15:45:04
news-image

அரசாங்கத்தின் முக்கிய திட்டங்களுக்கு உலக வங்கியிடமிருந்து...

2025-01-21 15:46:28
news-image

புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் வரை பயங்கரவாத...

2025-01-21 15:22:45
news-image

காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க பொதுமக்களிடம்...

2025-01-21 15:30:13
news-image

யாழ். கலாசார நிலையப் பெயர் மாற்றம்...

2025-01-21 15:19:24