மட்டு. மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் சர்வதேச தாய்மொழி தின நிகழ்வு

28 Feb, 2024 | 02:42 PM
image

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம், சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள சர்வதேச தாய்மொழி தின நிகழ்வானது பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை (27) பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

தாய்மொழிக்காக போராடி உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் உலகின் அனைத்து மக்களின் தாய்மொழி உரிமையை பாதுகாக்கும் வகையில் பெப்ரவரி 21ஆம் திகதியை சர்வதேச தாய்மொழி தினமாக (International Mother Language Day) ஐ.நா.,வின் யுனெஸ்கோ 1999ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தியது. 

இதனையடுத்து 2000ஆம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் பெப்ரவரி 21ஆம் திகதியன்று சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மேற்படி நிகழ்வில் "நம் தாய்மொழியை பேணுதல் ஒரு பன்முக நோக்கு" எனும் தலைப்பின் கீழ் தென்கிழக்கு பல்கலைக்கழக உதவி பதிவாளர் சஞ்சீவி சிவகுமாரால் சிறப்புரை ஆற்றப்பட்டது. 

அத்துடன், பிரதேச கலைஞர்களின் பாடல்கள் மற்றும் கலைக்கழக மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.

மேலும், கதிரவன் பட்டிமன்ற பேரவை வழங்கும் 126வது சிறப்பு பட்டிமன்றம் "தற்காலத்தில் தமிழ்மொழி வளர்கிறது - தற்காலத்தில் தமிழ்மொழி தளர்கிறது" எனும் தலைப்பில் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08
news-image

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை...

2024-04-09 14:10:46