IDM Nations Campus அனுசரணையில் 'அக்ஷரா மற்றும் வீனஸ்' இசைக் கலைஞர்களின் இனிய இசையில் ஆடல், பாடல், நகைச்சுவை மிமிக்கிரி கலந்த கலக்கல் இன்னிசை மாலை 'நான் ரெடிதான் வரவா' கதம்ப நிகழ்ச்சி கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் மிக பிரமாண்டமாக இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு IDM Nations Campusஇன் தலைவர் கலாநிதி விநாயகமூர்த்தி ஜனகன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் அதிக வணக்கத்துக்குரிய பிதா அருட் கலாநிதி சந்ரு பெர்னாண்டோ நிகழ்வின் கௌரவ அழைப்பை ஏற்று வருகை தந்திருந்தார்.
சர்வதேச ரோயல் கல்வியகத்தின் தகவல் தொழில்நுட்ப ஆசிரியராக பதவி வகிக்கும் சிவபாலசுந்தரம் சிவரோஷினி தலைமை வகித்த இந்த இசை நிகழ்ச்சிக்கு கவிஞர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கலைத்தென்றல் செல்வராணியின் நாட்டிய குழுவினர் வரவேற்பு நடனமாடி அசத்தினர்.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அங்கவீனமுற்ற ஒருவருக்கு இலவசமாக சுழல்கதிரை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM