தாமரைப்பூ பறிக்கச்சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு - திருகோணமலையில் சம்பவம் !

28 Feb, 2024 | 10:42 AM
image

திருகோணமலை, வெருகல் பூநகர் பனிச்சங்குளத்தில் தாமரைப்பூ பறிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஈச்சிலம்பற்று - பூமரத்தடிச்சேனை பகுதியில் வசித்து வரும் கனகசுந்தரம் விவேகானந்தன் (வயது 33) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

பூநகர் - பனிச்சங்குளத்திற்கு இன்று (28) காலை  தாமரைப்பூ பறிப்பதற்காக பைபர் படகில் இருவரும் சென்ற போது பைபர் படகு கவிழ்ந்ததாகவும், இதனையடுத்து தான் நீந்தி கரைக்கு வந்ததாகவும் உயிரிழந்தவரின் சக நண்பர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

நீரில் மூழ்கி உயிரிழந்த நபரின் சடலம் மரண விசாரணை அதிகாரியின் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41