மாபாகே துப்பாக்கிச் சூடு தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலி

Published By: Digital Desk 3

28 Feb, 2024 | 09:51 AM
image

மாபாகே பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரொருவர் சூரியவெவ பகுதியில் விசேட அதிரடிப்படையுடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த  சந்தேகநபர் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் இவரே  என தெரியவந்துள்ளது.

கடந்த 21 ஆம் திகதி காலை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் எலப்பிட்டிவல சந்தியில் உள்ள இறைச்சிக் கடையொன்றுக்கு அருகில் வைத்து கடை உரிமையாளர் மீது துப்பாக்கிச்சூட்டை நடத்தினர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர்  ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

இவர் ஹெட்டியாராச்சிகே டொன் சுஜித் என்றழைக்கப்படும் “உக்குவா” என அடையாளம் காணப்பட்டார், குற்றவியல் கும்பல் தலைவரான “வெல்லே சாரங்க”வின் மைத்துனரும் ஜா-எல வடக்கு படகம பகுதியைச் சேர்ந்தவருமாவார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரி உட்பட இருவர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

"துபாய் நிபுனா" தலைமையிலான போட்டி கும்பல் கொலையை திட்டமிட்டதாக சந்தேகிக்கப்பட்டது. துபாய் நிபுனா கும்பலிடம் இருந்து சுஜித்துக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மட்டக்களப்பு செங்கலடி இராணுவ முகாமில் கெமுனு கண்காணிப்பு படைப்பிரிவின் 4 வது படைப்பிரிவின் கோப்ரல் அதிகாரியாக கடமையாற்றிய பிரதான சந்தேக நபர்  பெப்ரவரி 24 ஆம் திகதி தப்பியோடிய போது கைது செய்யப்பட்டார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வந்துகொண்டிருந்தபோது முகாமில் இருந்து தப்பிச் சென்ற அவர், பின்னர் விரிவான தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து அம்பாறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இக்கொலைக்கு உதவிய மற்றுமொரு சந்தேகநபர் அன்றைய தினம் ஹக்மன, நரவெல்பிய தெற்கு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். அறிக்கைகளின்படி, இந்த சந்தேக நபர் 2009 இல் அடிப்படை பயிற்சித் திட்டத்தைப் பின்பற்றி இராணுவத்திலிருந்து விலகிச் சென்று பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-07 06:02:56
news-image

மட்டக்களப்பு கல்லடிவெட்டை, கானாந்தனை கிராமங்களுக்கு ஒரு...

2025-02-07 04:59:27
news-image

வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டர்...

2025-02-07 04:38:38
news-image

தீ விபத்தில் சிக்கிய இளம் யுவதி...

2025-02-07 04:35:26
news-image

யாழ் மக்கள் தவறுதலாக தேசிய மக்கள்...

2025-02-07 04:30:08
news-image

அரசாங்கத்துக்கு இது தேனிலவு காலம், 10...

2025-02-07 04:16:54
news-image

சட்டமா அதிபருக்கு எதிராக சட்டமா அதிபர்...

2025-02-07 03:59:02
news-image

அரசாங்கம் காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பில்...

2025-02-07 03:50:26
news-image

மே 9 வன்முறை: சேதமடைந்த வீடுகளுக்கு...

2025-02-07 03:21:59
news-image

குழாய் நீரை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட...

2025-02-06 16:21:18
news-image

பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் வகையில் நயவஞ்சகத்துடன் எவரும்...

2025-02-06 16:23:38
news-image

கொள்கலன்களை விரைவாக பரிசோதித்து விடுவிக்க சுங்கம்...

2025-02-06 19:09:09