(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் 06 விமான பயணச் சேவைகள் செவ்வாய்க்கிழமை (27) இரத்து செய்யப்பட்டதால் தேசிய மற்றும் சர்வதேச பயணிகள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் 173 இலக்க விமானம் செவ்வாய்க்கிழமை (27) அதிகாலை 01.10 மணிக்கு பெங்களூர்- இந்தியா நோக்கி புறப்படவிருந்த நிலையில் பயணச் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அதிகாலை 01.15 மணிக்கு பெங்கொக் நோக்கி புறப்படவிருந்த யு எல் 402 விமானம் இரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டனர்.
அதேபோல் செவ்வாய்க்கிழமை (27) பகல் 1.45 மணிக்கு சென்னை நோக்கி புறப்படவிருந்த யு.எல். 127 இலக்க விமானம்,மாலை 05.10 மணிக்க மும்பை நோக்கி புறப்படவிருந்த யு.எல் 143 இலக்க விமானம், மாலை 06.30 மணிக்கு தமாம் நோக்கி புறப்படவிருந்த யு.எல்.263 இலக்க விமானம், மாலை.06.50 மணிக்கு அபுதாபி நோக்கி புறப்படவிருந்த யு.எல்.207 இலக்க விமானம் இவ்வாறு இரத்து செய்யப்பட்டன.
விமானத்துக்குள் எலி புகுந்தமை, தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட பல காரணிகளால் கடந்த சனிக்கிழமை விமான சேவைகள் தாமதமானதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் அதிகாரிகள் கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறிப்பிட்டனர்.
கடந்த சனிக்கிழமை சேவைக்கு சமூகமளிக்காத விமான சேவைகள் நிறுவனத்தின் 13 பணியாளர்களை சேவையில் இருந்து இடைநிறுத்துமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன் ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் நிர்வாகத்தின் பலவீனம் மற்றும் குறைப்பாடுகளினால் விமான சேவைகள் தாதமதாகுவதுடன், இரத்து செய்யப்படுகின்றன என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM