(எம்.ஆர்.எம்.வசீம்)
எதிர்க்கட்சிகள் தங்களின் இயலாமையை மறைப்பதற்கே சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நடவடிக்கை எடுத்திருக்கின்றன. இவர்களின் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை இதற்கு முன்னர் கொண்டுவந்த பிரேரணைகள் போன்று புஷ்வாணமாகிவிடும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நிகழ்நிலை காப்புச்சட்டத்தை அனுமதித்து சபாநாயகர் கைச்சாத்திட்டமைக்கு எதிராகவே தற்போது எதிர்க்கட்சிகள் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர நடவடிக்கை எடுத்திருக்கிறது. குறித்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்போது சட்டமூலத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய திருத்தங்கள் உள்வாங்கப்படவில்லை எனத் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனே சபையில் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஆனால் பின்னர் சுமந்திரன் எம்.பி. பாராளுமன்ற அறைக்கு சென்று அங்கு சட்டமா அதிபர், உள்ளிட்டவர்களுடன் இதுதொடர்பாக கலந்துரையாடியபோது, அவர் இணங்கினார்.
அதனால் நிகழ்நிலை காப்புச்சட்டத்தை அனுமதிக்க சபாநாயகர் நன்கு ஆராய்ந்தே கைச்சாத்திட்டுள்ளார் அதில் எந்த சந்தேகமும் இல்லை. என்றாலும் எதிர்கட்சிகள் தங்களின் அரசியல் நோக்கிலேயே தற்போது சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நடவடிக்கை எடுத்திருக்கிறது.
அத்துடன் அரசாங்கம் தற்போது நாட்டின் பொருளாதாரத்தை படிப்படியாக ஸ்திர நிலைக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதேநேரம் மக்களுக்கு தேவையான நிவாரணங்களையும் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக அஸ்வெசும நிவாரணம் சுமார் 24 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதேபோன்று காணி உறுதி இல்லாதவர்கள் 20இலட்சம் பேருக்கு உரிமை வேலைத்திட்டம் ஊடாக காணி உறுதி வழங்க நடவடிக்கை எடுத்திருக்கிறது.
அத்துடன் அடுத்துவரும் காலங்களில் எரிபொருட்கள் எரிவாயு விலைகளில் குறைப்பு செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறது. மின்சார கட்டணத்தைக் குறைக்கத் தீர்மானித்திருக்கிறது. இவ்வாறு அரசாங்கம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும்போது அரசாங்க்ததுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ள எதிர்க்கட்சிகளிடம் எதுவும் இல்லை. அதனால் மக்கள் அவர்களை நிராகரிக்கும் நிலை ஏற்படும். அதனை மறைப்பதற்கே தற்போது எதிர்க்கட்சி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறது.
எனவே எதிர்க்கட்சிகளின் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்கட்சிகளின் இயலாமையை மறைப்பதற்கு கொண்டுவரப்படுவதாகும். அது பாராளுமன்றத்தில் தோல்வியடைவது என்பது அவர்களுக்கு தெரியும். இதற்கு முன்னரும் இவ்வாறான பல நம்பிக்கையில்லா பிரேரணைகளை கொண்டுவந்துபோது அவை தோல்வியடைந்தன. அதேபோன்று தற்போது சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையும் பாராளுமன்றத்தில் புஷ்வாணமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM