இலங்கை சட்டக் கல்லூரியின் 150 ஆண்டு நிறைவை முன்னிட்டு முதல் தபால் தலை வெளியீடு நிகழ்வு எதிர்வரும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வானது இலங்கை பிரதான நீதியரசின் தலைமையில் இலங்கை சட்டக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கையின் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய பி.சி அவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்
இந்நிகழ்ச்சியில் நீதி அமைச்சர் , உச்ச நீதிமன்ற நீதிபதிகள் , சட்டமா அதிபர் , மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் பிற நீதிமன்றங்களின் நீதிபதிகள், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், இலங்கை சட்டக் கல்லூரியின் அதிபர் மற்றும் ஊழியர்கள் , சட்ட மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கையின் சட்டக் கல்வித் தேவைப்பாடுகளுக்காகவும் இலங்கை சட்டத்தரணி மாணவர்களை பயிற்றுவிப்பதற்காகவும் இலங்கை சட்டக் கல்லூரி 1874 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது.
இலங்கையின் மிகவும் பழைமையான சட்டக் கல்லூரியாகவும் தொழிற்பயிற்சி நிறுவனமாகவும் இலங்கை சட்டக் கல்லூரி புகழ் பெற்று வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM