சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வெற்றிகளைப்பெற்று அசத்தும் இந்தியா

27 Feb, 2024 | 04:51 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டியில் 5 விக்கெட்களால் வெற்றிகொண்ட இந்தியா, தனது சொந்த மண்ணில் தொடர் வெற்றிகளை நிடித்தவண்ணம் அசத்தி வருகிறது.

அந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரை ஒரு போட்டி மீதம் இருக்க இந்தியா 3 - 1 என்ற ஆட்டக் கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்தியா தனது சொந்த மண்ணில் 200 அல்லது அதற்கு குறைவான வெற்றி இலக்கை நோக்கி டெஸ்ட் போட்டிகளில் துடுப்பெடுத்தாடிய 33 சந்தர்ப்பங்களில் 30இல் வெற்றிபெற்றுள்ளது.  இதன் மூலம் சொந்த மண்ணில் தோல்வியை அடையாத அணியாக இந்தியா திகழ்கிறது. மற்றைய 3 போட்டிகளில் முடிவு கிட்டவில்லை.

அத்துடன் தனது சொந்த மண்ணில் 17ஆவது தொடர்ச்சியான டெஸ்ட் தொடர் வெற்றயை ஈட்டி வரலாறு படைத்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2013இல் ஈட்டி தொடர் வெற்றியிலிருந்து இந்தியாவின் வெற்றிநடை தொடர் அவுஸ்திரேலியா  கொண்டுள்ளது. அவுஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் 1994இல் இருந்து 2000 வரையும் 2004இல் இருந்து 2008 வரையும் 10 தொடர்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றிருந்தது.

இது இவ்வாறிருக்க, இளம் வீரர் யஷஸ்வி ஜய்ஸ்வால் தனது முதல் 8 டெஸ்ட் போட்டிகளில் 971 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதன் மூலம் எட்டு டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய மொத்த ஓட்டங்களைப் பெற்ற இந்திய துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை ஜய்ஸ்வால் படைத்துள்ளார். சுனில் காவஸ்கர் 8 போட்டிகளில் பெற்ற 938 ஓட்டங்கள் என்ற சாதனையை ஜய்ஸ்வால் இப்போது புதுப்பித்துள்ளார்.

அவுஸ்திரேலியரான டொன் ப்றட்மன் முதல் 8 போட்டிகளில் குவித்த 1210 ஓட்டங்களுக்கு அடுத்ததாக அதிக ஓட்டங்களைப் பெற்றவர் ஜய்ஸ்வால் ஆவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20
news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-09 11:13:16
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34
news-image

திமுத் கருணாரட்னவின் கடைசித் துடுப்பாட்டம்; நாளை...

2025-02-08 20:49:02
news-image

இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின்...

2025-02-08 20:46:18
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை...

2025-02-08 21:05:32
news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20
news-image

புனித சூசையப்பர் அணியின் 11 வயது...

2025-02-07 13:22:16
news-image

இந்துக்களின் சமர் - நாணய சுழற்சியில்...

2025-02-07 11:38:55
news-image

14ஆவது இந்துக்களின் கிரிக்கெட் சமர்  யாழ்....

2025-02-06 19:07:08