(நெவில் அன்தனி)
சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் நமிபியா வீரர் ஜான் லொஃப்டி ஈட்டன் அதிவேக சதம் குவித்து புதிய உலக சாதனை நிலைநாட்டியுள்ளார்.
நேபாளத்தின் கீர்த்திபூரில் நடைபெற்றுவரும் மும்முனை சர்வதேச கிரிக்கெட் தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் லொஃப்டி ஈட்டன் 33 பந்துகளில் சதம் குவித்து சாதனை படைத்துள்ளார்.
நேபாள வீரர் குஷால் மல்லாவினால் நிலைநாட்டப்பட்ட சாதனையை ஈட்டன் முறியடித்திருப்பது விசேட அம்சமாகும்.
சீனாவில் கடந்த வருடம் நடைபெற்ற 2022 ஆசிய விளையாட்டு விழா ரி20 கிரிக்கெட் போட்டியில் மொங்கோலியாவுக்கு எதிராக மல்லா 34 பந்துகளில் சதம் குவித்து முன்னைய உலக சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார்.
11ஆவது ஓவரில் 3ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் களம் புகுந்த 22 வயதான லொஃப்டி ஈட்டன் 36 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 101 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்.
கடந்த 32 ரி20 போட்டிகளில் அவர் வெறும் 182 ஓட்டங்களையே பெற்று 10.70 என்ற மிக மோசமான சராசரியைக் கொண்டிருந்தார். ஆனால், இன்றைய போட்டியில் சாதனை படைத்து ஹீரோவானார்.
ஆரம்ப வீரர் மாலன் க்ருஜர் 48 பந்துகளை எதிர்கொண்டு 59 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 52 பந்துகளில் 135 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
அப் போட்டியில் நமிபியா 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 206 ஓட்டங்களைக் குவித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 186 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.
ரி20 அதிவேக சதங்கள் (முதல் 5 வீரர்கள்)
லொஃப்டி ஈட்டன் (நமிபியா) - 33 பந்துகளில்
குஷால் மல்லா (நேபாளம்) - 34 பந்துகளில்
டேவிட் மில்லர் (தென் ஆபிரிக்கா), ரோஹித் ஷர்மா (இந்தியா), இலங்கை வம்சாவளி சுதேஷ் விக்ரமசேகர (செக் குடியரசு) -மூவரும் 35 பந்துகளில்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM