வோசிங்டனில் இஸ்ரேல் தூதரகத்தின் முன்னால் தீக்குளிக்க முயன்றவேளை எரிகாயங்களுடன் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்க விமானப்படைவீரர் உயிரிழந்துள்ளார்.
காசா யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் அமெரிக்க விமானப்படையை சேர்ந்த ஒருவர் வோசிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தனக்குதானனே தீமூட்டிக்கொண்டார்
ஆரோன்புஸ்னெல் என்ற 25 வயது விமானப்படைவீரரே உயிரிழந்துள்ளார்.
தீயை அணைத்தபின்னர் இரகசிய சேவை பிரிவினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்
இராணுவசீருடையில் காணப்படும் அந்த நான் தொடர்ந்தும்இனப்படுகொலையுடன் தொடர்புபட்டிருக்க விரும்பவில்லை என தெரிவிக்கும் இணையவீடியோவொன்று வெளியாகியுள்ளது.
தன்மேல்எரிபொருளை ஊற்றி தனக்குதானே தீமூட்டிக்கொள்வதற்கு முன்னர் அந்த நபர் சுதந்திர பாலஸ்தீனம் என கோசமிட்டார் என டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
காசாவில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் வோசிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்னால் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM