செல்வவளம் கொழிக்க நாளாந்தம் மேற்கொள்ள வேண்டிய பாராயண பரிகாரங்கள்..!

27 Feb, 2024 | 03:20 PM
image

எம்மில் சிலர் பல நெருக்கடியான தருணங்களில் மனதிற்குள் இறைவனின் சில மந்திரத்தை அல்லது தங்களுக்கு தெரிந்த சில மந்திரத்தை முழுமையான பக்தி உணர்வுடன் உச்சரித்து அந்த சூழல் தரும் அபாயங்களிலிருந்து எளிதாக மீள்வர். இதனை நாம் பலமுறை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம். 

இந்த வெற்றி பெற்ற மந்திரத்தை உச்சரிக்கும் உத்தியை.. அதாவது பாராயணம் செய்யும் விடயத்தை எம்முடைய செல்வவளத்தின் மேன்மைக்காகவும் பாவிக்கலாம். 

அதாவது செல்வவளம் கொழிக்க வேண்டும் என்றால்.. அதற்குரிய பிரத்யேக மந்திரத்தை நாளாந்தம் உச்சரித்தால் பலன் கிடைக்கும் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.

இந்த நூற்றாண்டில் முருக பெருமானை நேரிடையாக சந்தித்து அருள் பெற்றவர் பாம்பன் சுவாமிகள். அதன் பின் சென்னையில் ஆசிரமம் அமைத்து மக்களை நல்வழிப்படுத்தும் விடயங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர்.

இன்றும் இவரது ஜீவ சமாதிக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தங்களின் கஷ்டங்களை மனமுருக பிரார்த்தித்தால் அவர்களுக்கு ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் பரிபூரண ஆசி கிடைத்து கஷ்டங்களில் இருந்து விலகுவதாக தெரிவிக்கிறார்கள்.

பாம்பன் சுவாமிகள் ஏராளமான மந்திரங்களையும் எழுதி, அதனை பக்தியிசைப் பாடலாக உருவாக்கியிருக்கிறார். 

இந்த பாடல்களை கேட்டாலோ அல்லது ஒலிக்க வைத்தாலோ நெருக்கடியான சூழல்களிலிருந்து நிவாரணம் கிடைப்பதாக பக்தர்கள் தெரிவிக்கிறர்கள். அத்துடன் இவர் எழுதிய பல மந்திரங்களை நாளாந்தம் உச்சரித்தால்.. இன்னென்ன பலன்கள் கிடைக்கும் என பட்டியலிட்டு இருக்கிறார்கள் அந்த வகையில் அவர் எழுதிய சாஸ்திர பந்தம் எனும் மந்திரத்தை நாளாந்தம் 27 முறை உச்சரித்து மனமுருகப் பிரார்த்தித்தால் செல்வ வளம் அதிகரிக்கும்.

''வால வேதாந்த பாவா

சம்போகேத்து அன்பா

மாலைபூ ணேம திறமால் வலர்தே

சாலவ மாபாசம் போக மதிதேசார்

மாபூதம் வாபா தந்தா வேலவா..!''

இந்த மந்திரத்தை 27 முறை நாளாந்தம் உச்சரிக்க வேண்டும். முருக பெருமானின் திருவுருவத்திற்கு முன் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லும்போது.. 48 நாட்களுக்கு பிறகு உங்களுடைய செல்வ நிலை உயர்வதை அனுபவத்தில் காணலாம்.

இந்த மந்திரத்தின் பொருள் என்னவெனில்,“ தூயவனே..! வேதாந்த விலாச கடவுளே..! பேரின்பம் எனும் அனுபவத்திற்கு நாயகனே..! மாலைகளை அணிந்து செம்பொன் என திகழ்பவனே..! வன்மை சான்ற திருமாலுக்கும், வல்லவர்களுக்கும் கடவுளானவனே..! என்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும், பெரிய ஆணவாதி பந்தங்களும் ஒழிய, ஞானமும் புகழும் உள்ள பரமான்மாவே..! வந்து அருள்க..! உந்தன் திருவடி செல்வத்தை தந்தருள்க வேலவா..!''  இதனை உணர்ந்து கொண்டு, மந்திரத்தை வேதம் போல் பாராயணம் செய்து வந்தால், நீங்கள் ஈடுபட்டிருக்கும் தொழில் அல்லது வணிகத்தில் உயர்வு ஏற்பட்டு, செல்வ நிலை மேம்படுவதை அனுபவத்தில் உணரலாம்.  

தொகுப்பு சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யோகங்களை அருளும் யோகி தலங்கள் மற்றும்...

2024-04-16 14:24:26
news-image

செல்வ நிலையை மேம்படுத்தும் கொட்டையூர் கோடீஸ்வரர்...

2024-04-15 17:19:54
news-image

அனைத்து தோஷங்களுக்கும் நிவர்த்தி தரும் செந்தலை...

2024-04-11 10:43:09
news-image

சிறுநீரக கோளாறுகளை நீக்கி அருள் புரியும்...

2024-04-09 17:37:27
news-image

வாஸ்து தோஷமும், பித்ரு தோஷமும் நீக்கி...

2024-04-08 18:31:07
news-image

பெண்மணிகள் தீர்க்க சுமங்கலியாக வாழ அருள்...

2024-04-05 20:56:43
news-image

குழந்தை வரம் அருளும் வழுவூர் வீரட்டானேஸ்வரர்...

2024-04-04 15:21:26
news-image

குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள் -...

2024-04-04 15:24:18
news-image

புண்ணியத்தை அள்ளித் தரும் ஸ்ரீ வாஞ்சியம்...

2024-04-03 12:56:05
news-image

சித்தர்கள் அருளிய கோமுகி தீர்த்த பரிகாரம்

2024-04-02 14:21:11
news-image

துயர் களையும் தீப பரிகார வழிபாடு

2024-04-01 17:32:20
news-image

முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் தோஷங்களை விலக்கி,...

2024-03-24 21:02:46