''சீட் எஜ் திரில்லர் ஜேனரில் சத்தமின்றி முத்தம் தா என்ற படத்தை உருவாக்க வேண்டும் என தீர்மானித்து கதை எழுத தொடங்கினேன். எழுதும்போது இருந்த சவால்... உருவாக்கும் போதும் இருந்தது. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை தரும்'' என படத்தின் இயக்குநர் ராஜ் தேவ் தெரிவித்திருக்கிறார்.
செலிபிரைட் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் தயாரிப்பில், இயக்குநர் ராஜ்தேவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சப்தமின்றி முத்தம் தா' திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மேஷ், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எம். யுவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜுபின் இசையமைத்திருக்கிறார்.
மார்ச் ஒன்றாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
இதில் இயக்குநர் ராஜ் தேவ், ஒளிப்பதிவாளர் யுவராஜ், இசையமைப்பாளர் ஜூபின், நாயகி பிரியங்கா திம்மேஷ் ஆகியோர் பங்குபற்றினார். தவிர்க்க முடியாத காரணத்தினால் படத்தின் நாயகனான ஸ்ரீகாந்த் இந்நிகழ்வில் பங்குபற்றவில்லை.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' இந்தப் படத்தின் கதையை எழுதி முடித்தவுடன் படத்தில் நாயகன் டார்க் ஷேட் உள்ளவராக இருப்பதால் இதுவரை இத்தகைய கதாபாத்திரத்தில் நடிக்காத நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என தீர்மானித்தேன். இதனால் நடிகர் ஸ்ரீகாந்த்தை அணுகி கதையை விவரித்தேன். அவருக்கும் பிடித்திருந்தது.
நாயகியை மையப்படுத்தி தான் படத்தின் முழு திரைக்கதையும் பயணிக்கும். நாயகிக்கு நாயகன் மீது காதல் இருந்தாலும், தான் யார்? என்ற கேள்வி அவருக்குள் இருந்து கொண்டே இருக்கும்.
நாயகியை நாயகன் ஒரு விபத்திலிருந்து காப்பாற்றி தன்னுடைய வீட்டில் வைத்து சிகிச்சை அளித்துக் கொண்டிருப்பான். அவளை சுற்றி ஏராளமான ஆபத்துகள் இருக்கும். எப்படி அதிலிருந்து மீண்டார்கள் என்பது தான் கதை. '' என்றார்.
இதனிடையே இயக்குநர் ராஜ் தேவ் எழுதி இயக்கிய குறும்படத்திற்கு பத்துக்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகள் கிடைத்திருக்கிறது என்பதும், அவர் எழுதிய இரண்டு திரைக்கதைக்கு சர்வதேச அளவிலான கௌரவம் கிடைத்திருக்கிறது. என்பதும், வாசிப்பதிலும், எழுதுவதிலும் பெருவிருப்பமுள்ள ராஜ் தேவ் எழுதி இயக்கும் 'சத்தமின்றி முத்தம் தா' திரைப்படத்திற்கு தமிழ் ரசிகர்களைக் கடந்து உலகம் முழுவதிலும் உள்ள திரை ஆர்வலர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM