'கல்லூரி மாணவர்களை மையப்படுத்திய கதைகளை உருவாக்குவதில் எமக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. இந்த திரைப்படமும் கல்லூரிக்கு செல்லும் இளைஞர்களை குறி வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.
இது முழுக்க முழுக்க கல்லூரி இளைஞர்களுக்கான கதை' என 'போர்' படத்தின் இயக்குநர் பிஜோய் நம்பியார் தெரிவித்திருக்கிறார்.
'டேவிட்', 'சோலோ' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் உருவாகி இருக்கும் 'போர்' படத்தில் காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், டிஜே பானு, சஞ்சனா நடராஜன், தேவ் ராம்நாத், பாலா சுரேஷ் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜிம்ஸி காலித் மற்றும் பிரிஸ்லே ஒஸ்கார் டிசோசா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை பிரியங்க் பிரேம் குமார் தொகுத்திருக்கிறார்.
நட்பை முதன்மைப்படுத்தும் இத்திரைப்படத்தை முதன்மைப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டி சிரீஸ் மற்றும் ரூக்ஸ் மீடியா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் மது அலெக்ஸ் தயாரித்திருக்கிறார்.
மார்ச் ஒன்றாம் திகதி உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ் மற்றும் இந்தி மொழியில் நேரடியாக வெளியாகும் இத்திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' தமிழில் திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அந்தக் கனவு 'போர்' படத்தின் மூலம் முழுமையாக நிறைவேறி இருக்கிறது.
கல்லூரி கால வாழ்க்கை தொடர்பான கதையை எழுதி இயக்குவதில் எமக்கு எப்போதும் முழு விருப்பம் உண்டு. அந்த வகையில் இந்த திரைப்படம் கல்லூரிக்குச் செல்லும் இளைஞர்களை குறி வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.
காளிதாஸ் ஜெயராமிற்கும், அர்ஜுன் தாஸிற்கும் இடையே நடைபெறும் ஜாலியான போட்டிகள் தான் இப்படத்தின் கதை. இந்த கதையை தமிழில் உருவாக்கும் போதே இந்தியிலும் உருவாக்கி இருக்கிறேன் '' என்றார்.
அர்ஜுன் தாஸ் பேசுகையில், '' இயக்குநர் பிஜோய் நட்சத்திர ஹொட்டேல் ஒன்றில் சந்தித்து இப்படத்தின் கதையை விவரித்தார். அதன் போதே காளிதாஸ் நடிக்கிறார் என்பதையும் குறிப்பிட்டார். கதை நன்றாக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு தளத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாத அனுபவம். '' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM