இலங்கையில் பெண் கைதிகள் சடுதியாக அதிகரிப்பு…!

Published By: Digital Desk 3

27 Feb, 2024 | 01:50 PM
image

சி.சி.என்

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் பெண் கைதிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள்  திணைக்களத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது 2022 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இதன் மூலம் பெண்கள் அதிக குற்றச்சம்பவங்களுக்கு காரணகர்த்தாக்களாகி வருகின்றனர் என்பதுவும் அது குறித்த தேடல்களுக்கும் ஆய்வுகளுக்கும் இது வித்திட்டுள்ளது என்றும் பெண் சிவில் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. கொரொனா நெருக்கடிகளின் பின்னர் சில குடும்பத்தலைவர்களுக்கு பணி இழப்புகள் ஏற்பட்டன. இக்காலகட்டத்தில் குடும்பங்களை சரியாக நிர்வகிப்பதில் பெரும் பங்கை இல்லதரசிகளே எடுத்துக்கொண்டிருந்தனர். 

எனினும் 2022 இற்குப்பிறகு இதில் ஏற்பட்ட மாற்றங்கள் அவர்களை குற்றச்செயல்களுக்கு தூண்டி விடுவதற்கான காரணங்கள் ஆராயத்தக்கன. புள்ளி விபரங்களின் படி, 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டு குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 81 வீதத்தால் அதிகரித்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

2021 ஆம் ஆண்டு பெண் கைதிகளின் எண்ணிக்கை 215 ஆக இருந்த அதே வேளை 2022 ஆம் ஆண்டு இது 390 ஆக அதிகரித்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் 57 வீதமானோர் போதை பொருட்கள் மற்றும் மதுபானம் தொடர்பான குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களாகும். 

தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் பெண்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பது முக்கிய விடயமாகும். இவ்வாறான குற்றங்களில் கைது செய்யப்பட்ட பெண்களில் 22 தொடக்கம் 50 வயது வரையானவர்கள் சதவீதம் 77 ஆகும். மேலும் இவர்களில் 66 வீதமானோர் தரம் எட்டுக்கு கீழான பாடசாலை கல்வியை பெற்றவர்களாக உள்ளனர். இதே சதவீதத்தை கொண்ட பெண்கள் திருமணமானவர்களாகவும் உள்ளனர். இதை விட வருத்தத்தை அளிக்கும் தகவல் என்னவென்றால் இக்கைதிகளில் சுமார் 62 வீதமானோர் அதாவது 240 பேர் முதன் முதலாக சிறைவாசத்தை அனுபவிப்பவர்களாக உள்ளனர்.

ஆகையால் மேற்குறித்த தொகையினர் புதிய குற்றவாளிகளாக சமூகத்தில் உருவெடுத்துள்ளனர். இதே வேளை இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் கைதிகளின் தொகை அதிகரித்து வருவதால் அவர்களை  தாங்கும் திறன் கொண்டதாக சிறைச்சாலைகள் இல்லை என கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

2015 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையான ஏழு வருட காலப்பகுதிகளில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இலங்கை சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளின் எண்ணிக்கை 139 வீதத்திலிருந்து 232 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு சிறைச்சாலையின் கொள்ளளவு திறன் 100 ஆக இருக்கும் போது கைதிகளின் எண்ணிக்கை அதை விட இரண்டரை மடங்கு உள்ளதாகவும் இதன் காரணமாக சிறைச்சாலைகளின் கொள்ளளவு இவர்களை சமாளிக்க முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த இடநெரிசல் காரணமாக சிறைச்சாலைகளுக்குள் போதிய சுகாதார வசதிகளுக்கான பிரச்சினைகள் எழுந்துள்ள அதே வேளை பெண் கைதிகளும் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மிக முக்கியமாக கழிவறைகளுக்கு முன்பாக கைதிகள் காத்திருக்க வேண்டிய நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

கணக்காய்வு அறிக்கைகளின் பிரகாரம் 27 சிறைச்சாலைகளில் 187 கழிப்பறைகளுக்கான பற்றாக்குறைகள் நிலவுகின்றன. அதே வேளை 287 கழிப்பறைகள் திருத்தம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. இடப்பற்றாக்குறை நிலவும் சிறைச்சாலைகள்  14 உள்ளன. குறித்த சிறைச்சாலைகளில் 108,689 சதுர அடிகள் பற்றாக்குறை நிலவுவதாக கணக்காய்வறிக்கை கூறுகின்றது.

இதேவேளை, நீர்கொழும்பு மற்றும் வவுனியா சிறைச்சாலைகளில் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 01 ஆம் திகதி வரையில் பெண் கைதிகளுக்கான அறைகள் மற்றும் வார்டுகளில் முறையே 240 மற்றும் 141 சதுர அடி இடம் போதுமானதாக இல்லை என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.

 சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதற்கு இரண்டு காரணங்களை அறிக்கை மேலும் அடையாளம் காட்டியுள்ளது. ஒன்று, பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் சட்டச் சூழலின் செல்வாக்காகும். பொருளாதார நெருக்கடியின் போது எதிர்கொள்ளும் சிரமங்கள் குற்றச் செயல்களின் அதிக விகிதங்களுக்கு இட்டுச் செல்கின்றன, இதனால் கைதுகள் அதிகரிக்கின்றன, மற்றொன்று சிறைத்தண்டனைகளின் அதிகரிப்பு என அடையாளம் காணப்பட்டது. இவை போதைப்பொருட்களுடன் தொடர்புடைய குற்றங்களாகும்.

பெண் கைதிகளைப் போன்று ஆண்கைதிகளும் அதிகமாக போதை பொருள் குற்றங்களுடனேயே தொடர்பு பட்டவர்களாக உள்ளனர்.  இலங்கையில் உள்ள சிறைக் கைதிகளின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டின் இறுதிவரை 26,176 ஆகும், அதில் 53 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள், அதாவது 13,794 பேர்,   போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகள்” என்று கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21
news-image

ஒரே புள்ளியில் அமெரிக்கா - இந்தியா

2024-04-15 18:24:18