பங்களாதேஷுடனான ரி20 தொடரில் அசலன்க தலைவராகிறார்

Published By: Digital Desk 3

27 Feb, 2024 | 12:52 PM
image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இலங்கை அணியின் பதில் தலைவராக சகலதுறை ஆட்டக்காரர் சரித் அசலன்க விளையாடவுள்ளார்.

சகலதுறை ஆட்டக்காரரும் வழமையான அணித் தலைவருமான  வனிந்து ஹசரங்கவுக்கு அடுத்து நடைபெறவுள்ள சர்வதேச போட்டிகள் இரண்டில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால் உதவித் தலைவர் சரித் அசலன்க பதில் அணித் தலைவராக செயற்படவுள்ளார்.

அவர்கள் இருவரும் காலி ரிச்மண்ட் கல்லூரிக்காக ஒரே காலத்தில் விளையாடியவர்களாவர்.

எல்பிட்டி பாடசாலை ஒன்றில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த சரித் அசலன்க தனது கல்வியை ரிச்மண்ட் கல்லூரியில் தொடர்ந்தார். அங்கு கிரிக்கெட் விளையாட்டில் சகலதுறைகளிலும் பிரகாசித்த சரித் அசலன்க, கல்லூரி அணியின் தலைவராகவும் செயற்பட்டிருந்தார்.

இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் 2016 இல் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 1 - 0 என வெற்றிபெற்ற 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கு சரித் அசலன்க தலைவராக விளையாடியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச  ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் முழுமையான வெற்றியீட்டிய இலங்கை இளையோர் அணிக்கும் சரித் அசலன்கவே தலைமை தாங்கியிருந்தார்.

இந்த இரண்டுவகை கிரிக்கெட் போட்டிகளிலும் இளையோர் அணியில் வனிந்து ஹசரங்க விளையாடியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் இலங்கை அணிக்கு தலைமை தாங்கிய சரித் அசலன்க அப் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்திருந்தார்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமான சரித் அசலன்க, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தனது அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் இலங்கைக்கு பல வெற்றிகளை ஈட்டிக்கொடுத்துள்ளார்.

2016 இளையோர் உலகக் கிண்ணப் போட்டியின்போது  இலங்கையின் எதிர்காலத் தலைவர் என  வருணிக்கப்பட்ட சரித் அசலன்க அதனை விரைவில் நிறைவேற்றுவார் என நம்பப்படுகிறது.

ரங்கிரி, தம்புள்ளையில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி முடிவில் மத்தியஸ்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டிற்கு களங்கம் ஏற்படுத்தினார் என்ற குற்றத்தின்பேரில் அவருக்கு 2 சர்வதேச போட்டித் தடையை பொது மத்தியஸ்தர் கிறிஸ் ப்றோட் விதித்தார். அத்துடன் அவருக்கு போட்டி கட்டணத்தில் 50 வீத அபராதமும் விதிக்கப்பட்டது. 

இதனை அடுத்தே அசலன்கவுக்கு அணித் தலைவர் பதவி கிடைத்துள்ளது.

கடைசி ஓவரில் இலங்கையின் வெற்றிக்கு 3 பந்துகளில் 11 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது கமிந்து மெண்டிஸுக்கு வபடார் மொமாந்த் வீசிய பந்து நெஞ்சுயரத்திற்கு சென்றது. ஆனால், துடுப்பாட்ட எல்லையில் இருந்த மத்தியஸ்தர் லிண்டன் ஹனிபல் அதனை நோ போலாக அழைக்கவில்லை.

அந்த சந்தர்ப்பத்தில் கமிந்து மெண்டிஸ் துடுப்பாட்டக் கோட்டுக்கு வெளியே இருந்தவாறே பந்தை எதிர்கொண்டார்.

இறுதியில் இலங்கை 3 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.

இதனை அடுத்து மைதானத்திற்குள் புகுந்த வனிந்து ஹசரங்க அநாவசியமாக மத்தியஸ்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போதாக்குறைக்கு ஊடக சந்திப்பில் மத்தியஸ்தருக்கு பந்தை  சரியாக    தீர்மானிக்க முடியாவிட்டால் அவர் வேறு தொழிலுக்கு செல்வதே உகந்தது என வனிந்து ஹசரங்க குறிப்பிட்டிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22