அவுஸ்திரேலியாவின் இறைமைக்கு சீனாவால் ஆபத்து - நாடாளுமன்றத்திற்கான தனது இறுதி உரையில் அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஸ்கொட்மொறிசன்

Published By: Rajeeban

27 Feb, 2024 | 12:39 PM
image

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட்மொறிசன் நாடாளுமன்றத்திற்கான தனது பிரியாவிடை உரையில் சீனாவால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியாவை கட்டாயப்படுத்த அல்லது ஆதாயம்தேட சீனா மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து ஸ்கொட்மொறிசன் தனது நாடாளுமன்ற உரையில்  எச்சரித்துள்ளார்.

அவுஸ்திரேலியா சீனாவின் இறைமைக்கு ஆபத்தானதாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

சீனா மோதல் இராஜதந்திரத்தை மூலோபாய அடிப்படையில் தவிர்த்துவருவதை அடிப்படையாக வைத்து அந்தநாட்டின் நோக்கங்கள் பற்றி குழப்பம் ஏற்படக்கூடாது என தெரிவித்துள்ள ஸ்கொட்மொறிசன் சீனா சுதந்திரத்தை விட அதிகாரத்தை பலத்தை விரும்பும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனா தனதுநோக்கங்கள் என வரும்போது தனது மக்கள் குறித்து அக்கறை கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே எனது அரசாங்கம் சீனாவின் ஆக்கிரமிப்பினை வற்புறுத்தல்களை மிரட்டல்களை  எதிர்ப்பதில் உறுதியாகயிருந்தது எனவும் தெரிவித்துள்ள ஸ்கொட்மொறிசன்  நாங்கள் அடிபணிவோம் என சீனா நினைத்தது எனவும் தெரிவித்துள்ளார்.

2022 தேர்தல் முடிவுகள் காரணமாக சீனா தனது வற்புறுத்தும்  நடவடிக்கைகளை கைவிட்டிருக்கலாம் ஆனால் நாம் ஏமாறக்கூடாது அவர்களின் தந்திரோபாயங்கள் மாறலாம் ஆனால் மூலோபாயங்கள் மாற்றமடையவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34