3 சிறுவர்களை வைத்து ஒரு மணித்தியாலத்துக்குள் 20 ஆயிரம் ரூபாவை சம்பாதித்ததாக கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - ஹைட் பார்க் பிரதேசத்தில் இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் யாசகம் எடுக்கும் பெண் ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண் ஒருவர் இந்த மூன்று சிறுவர்களிடம் நன்கொடையாக பணத்தை வழங்கியுள்ளார். இந்நிலையில் குறித்த பெண் இந்த பணத்தை எடுத்து தன்வசம் வைத்தனை அவதானித்த நன்கொடை வழங்கிய பெண், இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததையடுத்து சந்தேக நபர் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் மூன்று சிறுவர்களும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டனர்.
சந்தேக நபரான பெண் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் மூன்று சிறுவர்களில் இருவரை மீரிகம பராமரிப்பு இல்லத்தில் வைக்கவும் அடையாளம் காணப்படாத மற்றுமொரு சிறுவனை மொரட்டுவை சிறுவர் காப்பகத்தில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM