இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகளாக வருபவர்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது அதிகரித்து வருவது குறித்து கவலை வெளியிட்டுள்ள இலங்கையின் சுற்றுலாத்துறையினர் இதன் காரணமாக நாட்டின் சில பகுதிகளில் இலங்கையின் தொழில்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை இந்த பிரச்சினையை
எதிர்கொண்டுள்ளது என இரண்டு சுற்றுலாத்துறை சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நீண்டகாலமாக தங்கியிருக்கும் நோக்கத்துடன் வரும் சுற்றுலாப்பயணிகள் உரிய பதிவுகள் இன்றி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து அதிகாரிகளுக்கு தொழில்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் சிறிதளவில் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்;து பின்னர்அவற்றை விஸ்தரிக்கின்றனர் என இலங்கையின் சுற்றுலாத்துறை அமைப்பொன்று தெரிவித்துள்ளது.
2022 ம் ஆண்டிலேயே இதனை அவதானித்தோம் தென்பகுதியில் இந்த நிலை உருவாகிவருவதை அவதானித்தோம் பின்னர் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்த நிலைமைய காணமுடிகின்றது என அந்த அமைப்புதெரிவித்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வந்து இடங்களை வர்த்தக நிலையங்களை வாடகைக்கு பெற்றுக்கொள்கின்றனர் இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகளை கொண்டுவரும் நிறுவனங்களாக செயற்படுகின்றனர் நாணயமாற்று நடவடிக்கைகளில் கூட ஈடுபடுகின்றனர் என எஸ்எல்;ஐடிஓவின் தலைவர் நிசார்ட் விஜயதுங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப்பயணிகள் இவ்வாறான வர்த்தகத்தில் ஈடுபடுவதால் சுற்றுலாத்துறையில் நம்பியிருக்கும் அந்த பகுதி உள்ளுர் மக்களின் வாழ்வாதாரம் மோசமாக பாதிக்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எங்களை மாத்திரமல்ல ஹோட்டல் உரிமையாளர்கள் உணவக உரிமையாளர்களையும் இது பாதிக்கின்றது இந்த விடயத்தில் அனைவருக்கும் சமமான தளம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கமும் இதேகருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளதுடன் நிலைமை கட்டுக்கடங்காத நிலைக்கு செல்வதற்கு முன்னர்அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM